திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாவனாவுக்கு காரில் நடந்த கொடூரம்.. 37 வயதில் 86 படங்கள், கடந்து வந்த பாதை

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழ் நடிகை உண்டான முகபாவனை இவருக்கு இருந்ததால் ரசிகர்கள் பாவனாவை கொண்டாட தொடங்கினர். தமிழில் வெயில், ஜெயம் கொண்டான், தீபாவளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் தனது முத்திரையை பாவனா பதித்துள்ளார். இந்நிலையில் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தயாரிப்பாளர் நவீன் என்பவரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : ரஜினி வில்லனை நோக்கி படையெடுக்கும் இயக்குனர்கள்.. முதல் ஆளாக முந்தி கொண்ட கே எஸ் ரவிக்குமார்

இன்று பாவனா தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவில் இவர் பல வளர்ச்சி அடைந்தாலும் சில கொடுமையான சம்பவங்களையும் அனுபவித்துள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு சில நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாவனா துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கடக்கலுக்கு மலையாள சினிமாவைச் சேர்ந்த திலீப் தான் காரணம் என்று பாவனா குற்றம் சாட்டினார். இந்த வழக்கு காரணமாக பல நாட்கள் கோர்ட், கேஸ் என பாவனா அலைந்து உள்ளார். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் பாவனா அணிந்திருந்த ஆடை மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

Also Read : அப்ப ஹீரோ இப்போ கேரக்டர் ஆர்டிஸ்ட்.. மவுசு குறையாத 5 சீனியர் நடிகர்களின் சம்பளம், முதலிடத்தில் விஜய்யின் அப்பா

அதற்கும் தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்திரந்தார். மேலும் சினிமாவுக்கு வந்து பாவனா கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிறது. பல வருடமாக சினிமாவில் இருக்கும் நடிகர்களே குறைந்த படங்கள் நடித்துள்ள நிலையில், பாவனா இப்போதே 80-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்று பாவனாவின் பிறந்தநாளை முன்னிட்டு 86 ஆவது படத்திற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தி டோர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல இன்னல்களுக்கு பிறகு பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பாவனா வந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : உள்ளுக்குள் ஆடை போட மறந்த பாவனா.. கண்டுபிடித்து கேவலப்படுத்திய நெட்டிசன்கள்

Trending News