வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவின் உண்மை பெயரை மாற்றிய நபர்.. அனுமதிக்காக சிவகுமாரிடம் போன சிபாரிசு

70 காலகட்ட சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா தற்போது பிரபல நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசந்த் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தை மணிரத்னம் தன் சொந்த தயாரிப்பில் தயாரித்திருந்தார்.

Also read : சூர்யாவை தூக்கியெறிந்த சங்கர்.. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்

அப்போது தான் அவர் சூர்யாவின் உண்மை பெயரை மாற்றி இருக்கிறார். ரசிகர்களால் சூர்யா என்று அறியப்பட்ட இவரின் உண்மை பெயர் சரவணன் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. நேருக்கு நேர் திரைப்படத்தில் இவர் நடிக்க கமிட்டான போது ஏற்கனவே சரவணன் என்ற பெயரில் ஒரு நடிகர் இருந்ததால் இவருடைய பெயரை மாற்ற மணிரத்தினம் முடிவெடுத்திருக்கிறார்.

அந்த வகையில் சூர்யா என்ற பெயரையும் அவர் தேர்வு செய்திருக்கிறார். அதற்கு முன்பாகவே அவர் சூர்யாவின் அப்பா சிவகுமாரிடம் இது குறித்து பேச முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவரிடம் நேருக்கு நேர் கேட்க தயங்கிய மணிரத்தினம் வேறு ஒருவரை சிபாரிசுக்கு அனுப்பி இருக்கிறார்.

Also read : ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சூர்யா 42.. மிரளவிட்ட மோஷன் போஸ்டர்

அதன் பிறகு சிவகுமாரும் நன்றாக யோசித்து சூர்யாவின் உண்மை பெயரை மாற்ற அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படித்தான் சரவணன் என்ற இளைஞர் சூர்யா என்ற நடிகராக மாறினார். நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்ற சூர்யா அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், ஏழை மாணவர்களை படிக்க வைக்கும் ஒரு சோசியல் சர்வீஸயும் செய்து கொண்டிருக்கிறார். தற்போது சூர்யாவின் உண்மை பெயர் யாரால் மாற்றப்பட்டது என்ற இந்த செய்தி ரசிகர்களுக்கு புதிய தகவலாக இருக்கிறது.

Also read : பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

Trending News