புதன்கிழமை, ஜனவரி 22, 2025

80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தன் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஜாம்பவானாய் வலம் வருபவர் உலக நாயகன் கமலஹாசன். அவ்வாறு இருப்பின் இவர் படங்களை ஓகே பண்ணும் நபரை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

பன்முகத் திறமை கொண்ட இவர் பழமொழிகளிலும் சகலகலா வல்லவனாய் நடித்து வெற்றி கொடுத்தவர். அவ்வாறு தமிழில் கே பாலச்சந்தரால் நடிகராய் அறிமுகமானவர். நடிகராய் வருமுன்பே ஆரம்பத்தில் நடன இயக்குனராகவே சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர்.

Also Read: மகனைக் காப்பாற்ற திட்டமிட்டு அந்தரங்க கேசில் மாட்டிவிட்ட அம்மா.. சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

இவர் நடித்த எண்ணற்ற படங்கள் வெற்றி கண்டுள்ளன. அவ்வாறு ஒரு முறை பனங்கள் பார்க்கில் இவரை சந்தித்த பாரதிராஜா தன் படத்தில் நடிக்க ஒப்புதல் கேட்டாராம். அந்த படம் தான் 16 வயதினிலே. அதற்கு கமலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

இவர் படங்களில் நடிக்க இவரின் அண்ணனான சாருஹாசன் இடம் தான் கதை சொல்ல வேண்டி இருந்ததாம். அதைத்தொடர்ந்து அவர் ஒப்புதல் பெற்ற பிறகுதான் கமல் அக்காதபாத்திரத்தை ஏற்று நடிப்பாராம். இவருக்கு முன்னே சினிமாவைப் பற்றி அறிந்த அவரிடம் ஓகே பண்ண வேண்டி இருந்ததாக பாரதிராஜா கூறியுள்ளார்.

Also Read: பெயரே தெரியாமல் தமிழில் கலக்கிய 5 வில்லன்கள்.. நல்லி பரோட்டா கறியை விழுங்கிய விஜய் சேதுபதியின் சேட்டா

மேலும் கமலும் எனக்கு கதை முக்கியமில்லை, என் அண்ணன் சொல்லிவிட்டால் போதும் நான் அந்த படத்தை ஏற்று நடிப்பேன் எனவும் கூறினாராம். அவ்வாறு 16 வயதினிலே படத்தில் பரட்டை ,சப்பானி கதாபாத்திரத்திற்கு வேறு இரு ஹீரோக்களை தான் தேர்ந்தெடுத்தாராம் பாரதிராஜா.

ஆனால் இவ்வளவு கேவலமாக நடிக்க முடியாது என்று அவர்கள் நிராகரித்தன் காரணமாக, சாருஹாசனின் ஒப்புதலுக்கிணங்க கமல் சப்பானி கதாபாத்திரம் ஏற்று சிறப்பு நடித்திருப்பார். மேலும் அந்த ஹீரோக்கள் யார் என்ற விஷயத்தை தற்போது சொல்லி என்ன பிரயோஜனம் என சொல்ல மறுத்துவிட்டார் பாரதிராஜா.

Also Read: விவாகரத்து கற்றுக் கொடுத்த பாடம்.. ஞானியாய் மாறி ரஜினி பாதையில் செல்லும் தனுஷ்

Trending News