வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெரிய பிரச்சனையை கிளப்பி விட்ட சக்களத்தி.. பதிலடி கொடுத்த மருமகள்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பூர்வீக வீட்டை விற்கும் முடிவுக்கு வந்த மூர்த்தி, அதை மீனாவின் அப்பாவே அதிக விலை கொடுத்து வாங்க முன்வந்தால் அவருக்கே அதைக் கொடுத்து விடலாம் என முடிவெடுத்துள்ளார்.

இதை அறிந்த முல்லையின் அம்மா மற்றும் முல்லையின் அக்கா மல்லி இருவரும் தனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியே வந்த கதிர்-முல்லை இருவருக்கும் அந்த வீட்டில் பங்கு இருப்பதால் அதை கொடுக்கும்படி முல்லையின் அம்மா கேட்கிறார்.

Also Read: ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் கதிர்.. குரளி வித்தை பிரமாதம் முல்லை

ஒருவேளை வீட்டை ஜீவா பேரில் எழுதி வைக்கிறீர்களா என்று கேட்கிறார். அப்போது மல்லி என்னிடம் சொல்லியிருந்தால் மீனாவின் அப்பா கொடுக்கும் பணத்தை விட 2 லட்சம் அதிகமாகவே கொடுத்து வாங்கி இருப்பேனே என பணத் திமிரை காட்டி, முல்லையின் அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தில் மேலும் பெரிய பிரச்சினையை கிளப்பி விடுகிறார்.

ஆனால் இதையெல்லாம் அசால்டாக சமாளிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூத்த மருமகள் தனம், வீட்டை விற்கும் பணத்தை வைத்து புதிதாக மனை வாங்கி வீடு கட்ட போகிறோம். அது நான்கு அண்ணன் தம்பிகளின் பெயரில்தான் இருக்கும்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. கொளுத்திப் போட தயாரான கமல்

இதில் எந்த பிரிவும், பாகுபாடும் இல்லை என்று நெத்தியடி பதில் கொடுக்கிறார். ஏற்கனவே தன்னுடைய வீட்டிற்கு சென்று எல்லை மீறி பேசக்கூடாது என முல்லையின் அம்மாவிடம் கதிர் காட்டமாக மாமியார் என்று கூட பார்க்காமல் பேசினார்.

இருந்தாலும் அதைக் கேட்காமல் மல்லி உடன் சேர்ந்து கொண்டு முல்லையின் அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தேவையில்லாத விஷயத்தை பேசி வாங்கிக் கட்டிக் கொள்கிறார். இவர்களது தரங்கெட்ட செயல்களால் சீரியல் ரசிகர்களும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

Also Read: டிஆர்பியில் அதகளம் செய்த சன் டிவி.. பரிதாபத்திற்குரிய நிலையில் பிரபல சேனல்

Trending News