திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லெஜண்ட் அண்ணாச்சிக்கு சினிமா ஆசை வந்த இடம்.. தள்ளு முள்ளில் தவித்த விஜய் சேதுபதி

சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி தன் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார். அதுவும் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்த முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் பதிக்கயுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பல கோடி செலவு செய்து கோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகைகள் பலரையும் அழைத்திருந்தார். அதேபோல் தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களின் டிரைலரை விட மிகக் குறுகிய காலத்திலேயே அதிக பார்வையாளர்கள் கடந்து சாதனை படைத்தது. மேலும் மிக விரைவில் தி லெஜண்ட் படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இந்நிலையில் அண்ணாச்சிக்கு சினிமாவில் நடிக்க எப்படி ஆசை வந்தது என்பது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அண்ணாச்சி நடிப்பதற்கு முன்பே சினிமா துறையில் பல பேருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் ஒரு முறை மலேசியாவில் நடைபெற்ற சினிமா கலை நிகழ்ச்சியில் அண்ணாச்சி கலந்துகொள்ள சென்றுள்ளார்.

அப்போது சினிமா பிரபலங்களைப் பார்க்கவந்த கூட்டத்தை விட அண்ணாச்சி உடன் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக கூட்டம் அலைமோதி உள்ளது. இதனால்தான் கிட்டத்தட்ட அவருக்கு முதல் முறையாக சினிமா ஆசை வந்துள்ளது. மேலும் அவர்கள் சினிமாவில் நடித்த முன்னேறியவர்கள் ஆக இருந்தாலும், நாம் உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.

நாமும் சினிமாவில் நடித்தால் என்ன என்று ஆசை அண்ணாச்சிக்கு வந்துள்ளது. அதுமட்டுமன்றி விஜய் சேதுபதி ஒருமுறை அண்ணாச்சி உடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வந்தபோது பொதுமக்கள் அவரை தள்ளி விட்டனராம். இதை விஜய்சேதுபதியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் விஜய் சேதுபதியை விட நமக்கு மவுசு அதிகமாக இருக்கிறது என அண்ணாச்சி நடிக்க வந்துள்ளார்.

Trending News