TVK In Vijay: விஜய் கடந்த ஆண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரடியாக சந்தித்து பாராட்டுகளையும் பரிசுகளையும் கொடுத்து கௌரவித்தார். அப்பொழுதே இவர் அரசியலுக்கு ஆயத்தமாகிவிட்டார் என்று உறுதியாகிவிட்டது.
அந்த வகையில் அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி பெயரை தொடங்கி விட்டார். இதனைத் தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்து நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார். அடுத்ததாக இந்த ஆண்டும் மாவட்ட ரீதியாக இரண்டு நாட்களாக பிரித்து இன்றும் மற்றும் ஜூலை 3ம் தேதியும் மாணவர்களை நேரடியாக சந்தித்து வைரம் மோதிரம் மற்றும் கம்மலையும் பரிசாக வழங்குகிறார்.
அந்த வகையில் இன்று பேசிய விஜய் மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ மாணவிகளை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேச்சை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்த மாதிரியான ஒரு நிகழ்வுகளில் நல்ல விஷயங்களை பேச வேண்டும். உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்யுங்கள். எந்தத் துறையில் தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதை தேர்வு செய்யுங்கள்.
சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாட்டை பற்றி பேசிய TVk தளபதி
வருங்கால இந்தியா மாணவர்கள் கையில் இருக்கிறது என்று சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லப்படவில்லை. உண்மையிலேயே படித்த மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து ஒரு வளமையான இந்தியாவை கொண்டு வர வேண்டும். அதற்கு அடிக்கல் நாட்டும் விதமாக மாணவர்கள் ஒவ்வொரு துறையையும் எப்படி தேர்ந்தெடுத்து படிக்கிறார்களோ, அதே மாதிரி அரசியலிலும் ஆர்வம் காட்டி நல்ல படித்தவர்கள் தலைவர்களாக வர வேண்டும்.
மாணவர்களை சந்திக்க புது கெட்டப்புடன் நுழைந்த தளபதி
நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை. அதற்கு அவர்கள் தலைவர்களாக வர வேண்டும். எதிர்காலத்தில் அரசியலிலும் பணிபுரிய ஒரு கேரியர் தேர்வாக ஏன் வரக்கூடாது. அதுவும் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கிறது. நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரம் வேண்டுமா வேண்டாமா? மாணவர்கள் படிக்கும்போதே அரசியலில் பங்கேற்கலாம்.
அப்பொழுதுதான் ஒரு வளமான நாட்டை உருவாக்க முடியும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் இன்று மாணவர்கள் முன்னிலையில் பேசி மேடையை அலற விட்டிருக்கிறார். அத்துடன் சமூக வலைதளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் புரணி பேசி பல கருத்துக்கள் போய்க் கொண்டிருக்கும். ஆனால் அனைத்தையும் உற்றுக் கவனித்து எது உண்மை எது பொய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அப்படி தெரிந்து கொண்டாலே தற்போது இருக்கும் அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முக்கிய பங்காக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள், நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கத்தில் ஈடுபட்டால் அதிலிருந்து அவர்களை மீண்டு கொண்டு வர முயற்சி எடுங்கள்.
நீங்கள் எக்காரணத்தை கொண்டும் அதில் நுழைந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் அதிகமாக பயன்பாட்டில் இருக்கிறது. எனக்கு இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. தற்போது ஆளும் அரசு அதைத் தவிர விட்டுவிட்டது என்று அதைப் பற்றி பேசுவதற்கான மேடை இதுவல்ல.
சில நேரம் அரசாங்கம் செய்வதை விட நம்மளுடைய பாதுகாப்பு தான் நமக்கு ரொம்ப முக்கியம். எனவே உங்களுடைய சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள் `Say no to temporary pleasure, Say no to Drugs’” என்று சொல்லி மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறார். மேலும் தோல்வி கண்டு பயந்து விடாதீர்கள். வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம். வெற்றி என்பது முடிவும் அல்ல, தோல்வி தொடர்கதையும் அல்ல, என்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி உரையை முடித்துக் கொண்டார்.