Gossip: தற்போது உச்ச நடிகராக இருக்கும் அந்த ஹீரோ அழகுக்கு பேர் போன நடிகையுடன் ஒரு படத்தில் நடித்தார். அப்போதிலிருந்து அவர் மீது ஒரு கண் இவருக்கு உண்டு.
நடிகை எல்லா மொழிகளிலும் பம்பரமாக சுற்றி நடித்து வந்தார். அனைத்து ஹீரோக்களுக்கும் இவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அந்த அளவுக்கு நடிகை அழகு மட்டுமல்லாமல் திறமையும் கொண்டவர். அப்படி ஒரு முறை நடிகை பக்கத்து மாநிலத்தில் படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார்.
தங்கத்தால் அழகு பார்த்த சம்பவம்
அதே ஊருக்கு உச்ச நடிகரும் ஷூட்டிங் வந்திருக்கிறார். நடிகை அங்கு இருக்கும் தகவலை கேட்ட உடனே ஹீரோ அவரை சந்தித்து இருக்கிறார்.
இருவரும் சொகுசு பங்களாவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கி இருந்தார்களாம். அப்போது அந்த நடிகர் நடிகைக்கு தங்கத்தை வாரி வழங்கி இருக்கிறார்.
சில சொத்துக்களையும் கூட அவருக்கு எழுதிக் கொடுத்ததாக தகவல் உண்டு. ஆனால் இந்த விவகாரம் திரை உலக்கில் முக்கிய ஒரு சிலரை தவிர யாருக்கும் தெரியாது.
பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தான் இது. ஆனால் இப்போது அது திரையுலகில் இலை மறை காயாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.