புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

குடும்ப குத்து விளக்கு நடிகையின் திடீர் மாற்றம்.. பணத்துக்காக இமேஜை அடகு வைக்கிறதா.?

Gossip: சின்னத்திரையில் அழகும் அம்சமுமாக நடித்த நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகையும் நடிப்பில் ஒன்றும் குறைந்தவர் கிடையாது.

விதவிதமான எக்ஸ்பிரஷன் கொடுத்து அசத்தி விடுவார். அப்படிப்பட்டவர் இன்று தன்னுடைய ஹோம்லி இமேஜை உடைத்திருக்கிறார்.

அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகு அம்மணியின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் தெரிந்தது. சோசியல் மீடியாவில் எப்போதுமே இவர் ஆக்டிவாக தான் இருப்பார்.

ஆனால் சமீப காலங்களாக அவர் நடத்தும் போட்டோ சூட் ஆச்சரியப்பட வைக்கிறது. அதிகப்படியான கிளாமரில் அவர் அணியும் உடைகள் விமர்சனம் ஆகி வந்தது.

குடும்ப குத்து விளக்கு நடிகையின் திடீர் மாற்றம்

ஆனால் நடிகை அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பெரிய திரை வாய்ப்புகளை ஓகே செய்து வந்தார். தற்போது அவர் நடித்திருக்கும் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

ஆனால் அதில் நடிகை ரொம்பவும் தாராளமாக நடித்திருந்தது அவரின் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதை உங்ககிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கலை என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

நடிகைக்கு என்ன ஆச்சு திடீரென இப்படி மாறிட்டார் என விசாரித்தால் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகை இப்போது முழுமூச்சாக படங்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

அதேபோல் வருமானமும் வேண்டும் என்பதால் இப்படி ஒரு ஆஃபர் கொடுத்து வாய்ப்புகளை கைப்பற்றி இருக்கிறாராம். என்ன இருந்தாலும் பணத்துக்காக இமேஜை அடகு வைக்கலாமா என சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News