ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

705 எபிசோடை கடந்த சூப்பர் ஹிட் சீரியலை முடித்து வைத்த பிரபல சேனல்.. ரொமான்டிக் சீரியலாச்சே!

சின்னத்திரை ரசிகர்களிடம் ரொமான்டிக் சீரியல் என்றாலே அதற்கு தனி மவுசு தான். இதை மனதில் வைத்துக்கொண்டு தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு தங்களது டிஆர்பியை ஏற்றுவதற்காகவே ரொமான்டிக் சீரியல்களை வரிசையாக தரையிறங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கோகுலத்தில் சீதை’ என்ற சீரியலில் காதல் தூக்கலாக இருக்கும் இந்த சீரியல் படு ஜாலியாகவும் சுறுசுறுப்பாகவும் சென்று கொண்டிருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது வரை 705 எபிசோடை கடந்திருக்கிறது.

இதில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடன இயக்குனராக இருக்கும் நந்தாவும் கதாநாயகியாக வசு கதாபாத்திரத்தில் ஆஷா கவுடா மற்றும் பழம்பெரும் நடிகை நளினி உள்ளிட்டோர் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான சீரியலாக இருந்தது.

இந்த சீரியலின் நேரத்தையும், இடையில் சீரியல் கதை போன்றவற்றில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி-யில் பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த சீரியல் நிறைவடைந்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

இதைப் போன்று ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ‘என்றென்றும் புன்னகை’ என்று தொடரும் சமீபத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலும் நிறைவடைந்திருக்கிறது.

ஆகையால் இந்த இரண்டு சீரியல்களுக்கு பதிலாக, வேறு புத்தம்புது சீரியல்களையோ அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளையோ துவங்கி ஜீ தமிழ் தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த திட்டம் தீட்டிருக்கிறது.

Trending News