
Gossip: சமீப காலமாகவே அந்த நடிகைக்கு நேரம் சரியில்லை. ஆனால் இதற்கு காரணம் வேறு யாரும் கிடையாது அவர் மட்டும்தான்.
பப்ளிசிட்டிக்காக ஏதோ செய்ய போய் கடைசியில் மாட்டுவது அவராகத்தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு ஏழரையாக இழுத்து வந்த அவர் தற்போது மார்க்கெட் ஆட்டம் காணும் அளவுக்கு ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.
அந்த இரண்டாம் பாகத்தில் நடிகை கமிட் ஆன கையோடு பூஜைக்கு வந்து அசத்தினார். ஆனால் அங்கும் மூத்த நடிகையை வெறுப்பேற்றி கெட்ட பெயரை சம்பாதித்தார்.
இயக்குனரின் அவதாரத்தை பார்த்து கப்சிப் ஆன நடிகை
அதேபோல் இப்போது படப்பிடிப்பு தளத்திலும் ஓவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை கட்டும் அவரால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது.
பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர் இந்த சீன் போடுற வேலை எல்லாம் இங்க வேண்டாம் என நேரடியாகவே லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.
வழக்கம் போல இந்த இயக்குனரிடமும் தன் கெ த்தை காட்ட பிளான் போட்டு இருக்கிறார். நடிகை ஆனால் அது செல்லுபடியாகாத நிலையில் இப்போது கப் சிப் என அடங்கிவிட்டாராம்.
அதுவும் சும்மா கிடையாது இயக்குனர் உன்னை தூக்கி விட்டு மில்க் நடிகையை கமிட் செய்து விடுவேன் என சொல்லி இருக்கிறார். எங்கே வந்த வாய்ப்பும் போய் மானமும் காற்றில் பறந்து விடுமோ என்று நடிகை இப்போது அடக்கி வாசிக்கிறாராம்.