வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி அதிமுக தொண்டர்களை குஷிப்படுத்தி உள்ளது.
ஏனென்றால் இந்த அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் பேரிடம் தேர்தல் வாக்குகளை எடுத்தபின், தற்போது இந்த சர்வே ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
இந்த சர்வே முடிவுகள் மண்டல வாரியாக வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 122 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 111 இடங்களை பிடித்து இரண்டாவது இடம் வகிக்கிறது. அமமுக கூட்டணி ஒரே ஒரு மண்டலத்தில் மட்டும் முன்னிலை வகுத்துள்ளது.
ஆகையால் இந்த சர்வே ரிப்போர்ட்டில் முழு விவரம் இதோ!
அ.தி.மு.க கூட்டணி:
கொங்கு மண்டலம் – 40
தொண்டை மண்டலம் – 34 + 8
சோழ மண்டலம் – 20
பாண்டிய மண்டலம் – 20
தி.மு.க கூட்டணி:
கொங்கு மண்டலம் – 28
தொண்டை மண்டலம் – 24 +12
சோழ மண்டலம் – 21
பாண்டிய மண்டலம் – 26
அ.ம.மு.க கூட்டணி:
பாண்டிய மண்டலம் – 1
இதை வைத்து பார்க்கும்போது நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.