சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2000 எபிசோடுகளை கடந்த சன் டிவியின் பிரபல சீரியல்.. ரொமான்ஸில் பட்டையை கிளப்பியது வீணாய் போகுமா!

சன் டிவியில் பல்வேறு கதை கருக்களை கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றில் சில நாடகங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. அத்தகைய சீரியல்களை ரேட்டிங்கை வைத்தே சொல்லிவிடலாம். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியல் 2000 எபிசோடுகளை கடந்து புது சாதனையை படைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சந்திரலேகா சீரியல் சீரியல் இன்று வரையிலும் நன்றாகவே ஓடிக்கொண்ருடிகிறது. இந்த சீரியல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளது. அவர்களையெல்லாம் திருப்திபடுத்தும் வகையிலும் சுவாரசியமான கதை பின்னணியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

மேலும் கொரோனா நோய் பரவல் காரணத்தினால் சின்னத்திரையில் நாடகத்திற்கான படப்பிடிப்பை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்தனர். அதனால் பல நாடகங்கள் விரைவில் முடிக்கப்பட்டது. சில நாடகங்களில் வெவ்வேறு ஆட்கள் மாற்றப்பட்டு சீரியல்கள் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இடையில் பல்வேறு புது நாடகங்களும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இவை அனைத்தை தாண்டியும் சந்திரலேகா தொடர் தற்போது தனது 2000 எபிசோடை கடந்ததால் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டு வருகிறது. இந்த சந்தோஷத்தை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

chandraleka-serial-suntv
chandraleka-serial-suntv

இந்த சந்திரலேகா குழுவினருக்கு வலைத்தளங்களிலும், நேரிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை பிரபலங்களும் இக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சந்திரலேகா நெடுந்தொடர் தற்போது 2000 எபிசோடை கடந்து விட்டதால் இனி வரக்கூடிய எபிசோடுகளில் பலவிதமான திருப்பங்களும், அதிரடி காட்சிகளும் அத்துடனே ரசிகர்களுக்காக ரொமான்ஸ் காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆகையால் இனிவரும் எபிசோடுகள் மிகுந்த சுவாரசியமாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Trending News