வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லோகேஷை குழப்பி விட்ட தளபதி 67 பட போஸ்டர்.. இதைவிட தரமா காமிக்க முடியுமா என சவால்?

விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் மிரட்டிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது கடந்த சில மாதங்களாகவே பரபரப்பை கிளப்பி வந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் தளபதி 67 பட போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் பற்றிய ஏதாவது ஒரு செய்தி வந்தாலே அதை கொண்டாடும் ரசிகர்கள் தற்போது இந்த படத்திற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை தயார் செய்திருக்கின்றனர்.

Also read:உச்சகட்ட சர்ப்ரைஸில் ஆழ்த்தும் லோகேஷ்.. 21 வருடங்களுக்கு பின் தளபதி 67ல் இணையும் ஹீரோ

வழக்கமாக லோகேஷ் படம் என்றாலே அதில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. மேலும் அவருடைய படம் கேங்ஸ்டர் பாணியில் துப்பாக்கி, வெடிகுண்டு என்று மிரட்டலாக இருக்கும். அதை வைத்து ரசிகர்கள் இப்போது தளபதி 67 படத்தின் போஸ்டரை அட்டகாசமாக உருவாக்கியுள்ளனர்.

அந்த போஸ்டரில் காரில் அமர்ந்திருக்கும் விஜய் கருப்பு நிற டிரஸ் அணிந்து வாயில் சிகரெட்டை வைத்து பற்ற வைக்கிறார். அது மட்டுமல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், தாடி, கூலிங் கிளாஸ் என்று அவருடைய லுக்கை முற்றிலுமாக ரசிகர்கள் மாற்றி இருக்கின்றனர்.

Also read:ரகசியமாய் காய் நகர்த்தும் லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கே தெரியாமல் செய்யும் தில்லாலங்கடி வேலை

மேலும் அந்த போஸ்டர் முழுவதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கிறது. அதற்கு கீழே பாம்பே கேங்ஸ்டர் என்று போடப்பட்டு விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரின் பெயரும் இருக்கிறது. இந்த போஸ்டர் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

முதலில் இந்த போஸ்டரை பட குழுவினர் தான் வெளியிட்டு இருக்கிறார்களோ என்று பலருக்கும் குழப்பமாக இருந்தது. அந்த அளவுக்கு இது பட குழுவினரையே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இருப்பினும் அவர்கள் இதைவிட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என போஸ்டர் குறித்து கூறி வருகின்றனர்.

தளபதி 67 பட போஸ்டர்

vijay-thalapathy67
vijay-thalapathy67

Also read:விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.? சிவகார்த்திகேயன் நீங்க இன்னும் வளரணும் தம்பி!

Trending News