500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இந்த மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதுதான் மணிரத்னத்தின் திரை கனவு.
அதன் முதல் பாகத்தை இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்களை வைத்து படு பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
Also Read: ஆண்டவரின் பாணியை பின்பற்றும் மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் உறுதி தான்
அதுமட்டுமின்றி படத்தின் புரமோஷனுக்காக படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன் உள்ளிட்டோர் சென்னை, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கெல்லாம் எந்த அவசியமும் இல்லை என காட்டும் அளவுக்கு, ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். நேற்று இரவு முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ள முன்பதிவில் பல திரையரங்குகளில் பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.
Also Read: கைதியை விட 10 மடங்கு பட்ஜெட்.. பொன்னியின் செல்வன் மேடையில் உண்மையை போட்டு உடைத்த கார்த்தி
இன்னும் ரிலீஸ் ஆக 5 நாட்கள் இருப்பதற்கு முன்பே, பிரீ புக்கிங்கில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் இதுவரை 10 கோடிக்கும் மேல் டிக்கெட் விற்பனை நடந்திருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சியின் மூலமாக மட்டும் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. இதைப் போன்று பிற நாடுகளிலும் பொன்னின் செல்வன் படத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: 23 வருட சாபத்தை தும்சம் செய்யும் பொன்னியின் செல்வன்.. சாதனை படைக்கும் மணிரத்தினம்
இதனால் படத்திற்கு வழங்கப்படும் கே.டி.எம் இப்போதை கொடுக்கப்பட்டு விநியோகஸ்தர்களை பெரும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. எனவே சரித்திர நாவல் கதையம்சம் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தங்களது வரலாற்றை தெரிந்துகொள்ள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் இந்திய சினிமாவிற்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் ரிலீஸான பிறகு, சில வாரத்திலேயே பாக்ஸ் ஆபீஸில் அசால்டாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூலைக் குவிக்கும் என இப்பவே திரை விமர்சகர்கள் கணித்துள்ளனர்.