வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வந்தியதேவனிடம் சிக்கி சின்னாபின்னமான இளவரசன்.. தலைகீழாய் மாறிய நிலைமை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான் படங்கள் வசூல் ரீதியாக பட்டையைக் கிளப்பியது.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் காம்போ வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது. இதை கருத்தில் கொண்டு பிரின்ஸ் படத்திலும் சத்யராஜ் நடித்துள்ளதால் படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read :பிரின்ஸ் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியா, தோல்வியா? மரண பீதியில் வெளிவந்த முழு விமர்சனம்

ஆனால் சர்தார் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியதால் நிறைய திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் படத்திற்கு மிகவும் குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி பிரின்ஸ் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

மேலும் சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தி சர்தார் படத்தில் பல கெட்டப்புகள் நடித்திருந்தார். படம் விறுவிறுப்பாகவும், அட்டகாசமாகவும் இருந்ததாக ரசிகர்கள் சர்தார் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

Also Read :காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

தொடர்ந்து கார்த்திக்கு தற்போது தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். விருமன் வெற்றிக்கு பிறகு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் .

தற்போது சர்தார் படத்திலும் கார்த்தி அதகளம் செய்துள்ளார். மொத்தத்தில் வந்தியதேவனிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகியுள்ளார் இளவரசர் என்று ரசிகர்கள் சிவகார்த்திகேயனை விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் சர்தார் படம் முதல் நாளே நல்ல வசூல் வேட்டையாடி வருகிறது.

Also Read :வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News