அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்போது துணிவு படத்தை பற்றிய செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லா படத்திலும் ஹீரோக்களுக்கு டூப்பாக சிலர் நடித்து இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட இந்தியன் 2 படத்தில் கமலுக்கு டூப்பாக ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எல்லோருமே அந்த டூப்பை மறைமுகமாக தான் வைத்துக் கொள்வார்கள்.
Also Read : அஜித் கொடுத்த 10 லட்சம்.. வீடுவரை சென்று அவமானப்பட்ட விஜயகாந்த்
ஏனென்றால் இது வெளியில் தெரிந்தால் தங்களை கேலி செய்வார்களோ என்ற பயத்தில் இப்படி மறைமுகமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லாத்தையுமே வித்தியாசமாக யோசிக்கும் அஜித் துணிவு படத்தில் தனக்கு டூப்பாக நடித்தவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக அஜித் போலவே இருக்கிறார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் துணிவு படத்தில் முக்கால்வாசி காட்சியில் டூப் தான் நடித்திருப்பார் என கேலி செய்து வருகிறார்கள்.
Also Read : அஜித்தை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சன்னி லியோன்.. துணிவு டீமுக்கு ஷாக் கொடுத்த ஓட்டிங் ரிப்போர்ட்
ஏனென்றால் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அவர் துணிவு படத்தில் சில காட்சிகள் மட்டுமே நடித்திருப்பார் என கூறி வருகின்றனர். இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே இணையத்தில் போர்க்களமே நடந்து வருகிறது.
அச்சு அசலாக அஜித் போல இருக்கும் டூப்
இந்நிலையில் துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இணையத்தில் வைரலான இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு இது அஜித்தின் டூப் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை சிலர் தவறாக கருதி இவ்வாறு செய்தி பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.
Also Read : இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்