திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் 2வை எதிர்பார்த்த கமலுக்கு வந்த சிக்கல்.. எல்லா இடத்திலும் மேயும் லோகேஷ் கனகராஜ்

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இப்போது லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் பிஸியாகி இருக்கிறார். விஜய், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு பெரும் சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. தற்போது கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை அடுத்து அவர் மணிரத்தினம் இயக்கத்திலும் நடிப்பதாக இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கும் முயற்சியிலும் அவர் இருக்கிறார்.

Also read: புரளியை கிளப்பி விடும் லோகேஷ் டீம்.. இப்படி ஒரு விளம்பரம் தேவையா குருநாதா

இப்படி கமல் ஒரு கணக்குப் போட்டு இருக்க லோகேஷ் வேறு திட்டத்தில் இருக்கிறாராம். அதாவது இப்போது அவர் தெலுங்கு தயாரிப்பாளருக்கு படம் பண்ணுவதாக ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கி இருக்கிறாராம் அதேபோன்று கன்னடத்திலும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு சம்மதித்திருக்கிறார். போதாத குறைக்கு தமிழில் கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட திரைப்படங்களும் அவர் கைவசம் இருக்கிறது.

இது போக சூப்பர் ஸ்டாரும் தன் பங்குக்கு அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கமலுக்கு படம் பண்ணுவதற்கு முன்பாக தனக்கு ஒரு படம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக கமலிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்றும் அவர் டார்ச்சர் கொடுத்து வருகிறாராம். ஏனென்றால் ரஜினி மிகப்பெரிய ஹிட் படம் ஒன்றை கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

Also read: ஆஸ்க்காருக்காக ரஜினிக்கு வலைவீசிய அக்கடு தேசத்து இயக்குனர்.. சூப்பர்ஸ்டாரின் புது அவதாரம்

அதற்காகத்தான் அவர் லோகேஷ் கனகராஜை தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்படி உச்ச நடிகர்களின் விருப்பத்தை மறுக்க முடியாமல் லோகேஷ் குழப்பத்தில் இருந்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தை தொடர்ந்து எந்த படத்தை முதலில் ஆரம்பிப்பது என்ற யோசனையில் அவர் தலை சுற்றி போய் அமர்ந்து விட்டாராம். இது கமலுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

இப்படி தன்னைத் தேடி வரும் பெரிய வாய்ப்புகளை எல்லாம் ஓகே செய்து வைத்திருக்கும் லோகேஷ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் அவருடைய லோகேஷ் யுனிவர்சில் உருவாகும் படத்துக்காக அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அந்த வகையில் அவருடைய அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தான் கோடம்பாக்கமே காத்திருக்கிறது.

Also read: காசு, பணம், துட்டு, மனி, மனி.. படம் ஓடலானாலும், விஜய் சேதுபதி நிரப்பி வரும் கல்லா பெட்டியின் ரகசியம்

Trending News