Mari Selvaraj: ஒரு பிரச்சனையை சும்மா விட்டிருந்தாலே சரியாகி இருக்கும். அதை விட்டுவிட்டு சரி செய்கிறேன் என்று அதை இன்னும் பெருசாக்கின கதையா தான் இப்போது மாரி செல்வராஜோட நிலைமை இருக்கு. இவரின் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் தான் மாமன்னன்.
கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இப்படம் வசூலில் எந்த குறையும் இல்லாமல் கெத்து காட்டியது. அதேபோன்று சில தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியானது. தியேட்டரை போலவே இங்கும் இப்படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இதுதான் இப்போது மாரி செல்வராஜுக்கு பெரிய தலைவலியாகவும் மாறி இருக்கிறது. ஏற்கனவே இப்படம் சாதிய பிரச்சனையை தூண்டும் என பலரும் கூறி வந்தனர். அதற்கேற்றார் போல் இயக்குனரின் பேச்சும் இருந்தது. அதேபோன்று படம் வெளியான பிறகு கூட பல்வேறு விவாதங்களை முன் வைத்தது.
அதெல்லாம் தற்போது ஓய்ந்தது என்று பார்த்தால் மீண்டும் அந்த பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது. அதாவது இப்படத்தில் பகத் பாசில் ஆதிக்க குணம் கொண்டவராக நடித்திருப்பார். அதிலும் படத்தில் இவருடைய கேரக்டர் ரொம்பவும் கொடூரமாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.
Also read: உதயநிதி அரசியலுக்கு அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. முதலும் கடைசியுமா வசூலை அள்ளிய மாமன்னன்
ஒரு நடிகனாக இவரின் நடிப்பு நம்மை என்ன மனுஷன்ய்யா என பேச வைத்தாலும், இந்த காலத்தில் இப்படி கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்றும் யோசிக்க வைத்தது. அந்த அளவுக்கு அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருப்பார். அந்த வகையில் தற்போது படத்தில் ஹீரோவாக நடித்திருந்த உதயநிதியை ஓரங்கட்டும் அளவுக்கு இவர் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.
அதிலும் ஒரு வில்லன் இந்த அளவுக்கு ட்ரெண்ட் ஆகி வருவது இதுவே முதல் முறை என்று கூட சொல்லலாம். மேலும் வெவ்வாறு சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்களுக்கு ஏற்றவாறு பாடலை போட்டு பகத் பாசிலின் வீடியோவை எடிட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவ்வாறாக சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல் ஆகிவிட்டது மாரி செல்வராஜின் நிலை.
Also read: நடிகையின் உதட்டை கடித்ததால் ஃபேமஸான 6 நடிகர்கள்.. அட நம்ம மாமன்னன் வடிவேலு இதுல இருக்காரா