நினைத்த மாதிரியே ஏற்பட்ட சிக்கல்.. பொன்னியின் செல்வனால் தவிக்கும் அண்ணன் தம்பி

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் திரையிடப்பட்ட அத்தனை தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இப்படி அதிரி புதிரியாக ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் சின்ன படங்கள் எல்லாம் அடிப்பட்டு விட்டது. ஏனென்றால் எல்லா தியேட்டர்களிலும் இந்த திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Also read : 20 வருடம் கழித்து மணிரத்னத்துடன் இணைந்துள்ள ஜாம்பவான்.. கூடவே இருந்தும் நடிக்காத 80ஸ் ஹீரோயின்

இதனால் நானே வருவேன் திரைப்படம் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் கடந்த 29ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆவதை தொடர்ந்து பல திரைப்படங்களும் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது.

ஆனால் நானே வருவேன் திரைப்படம் மட்டும் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களம் இறங்கியது. எப்படி இருந்தாலும் கல்லா கட்டிவிடலாம் என்ற நோக்கில் தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால் அவர் எதிர்பார்ப்பு தற்போது பொய்யாகி இருக்கிறது.

Also read : மணிரத்தினம் கிட்ட கத்துக்கோங்க ராஜமவுலி.. சொதப்பலை குத்தி காட்டும் ரசிகர்கள்

ஏனென்றால் நானே வருவேன் திரைப்படத்திற்கு தியேட்டர் ஓனர்களே வரவேற்பு கொடுக்க மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு பொன்னியின் செல்வனின் ஆதிக்கம் தான் தற்போது தலை தூக்கி இருக்கிறது. இதனால் நானே வருவேன் திரைப்படத்தின் ஷோவையும் பல தியேட்டர்கள் கேன்சல் செய்து வருகிறது.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நானே வருவேன் பட டீம் தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்ததுதான் என்று தனுஷ் செல்வராகவன் நிலையை பற்றி தற்போது பலரும் கிண்டல் அடித்து பேசி வருகின்றனர். தேவையில்லாமல் தானாக வந்து தலையை கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்ற சூழ்நிலையில் தான் தற்போது நானே வருவேன் டீம் இருக்கிறது.

Also read : நானே வருவேன் படத்தில் அசத்திய தனுஷ்.. சீனியர் நடிகருக்கே டஃப் கொடுத்த சம்பவம்