சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பாடாய்படுத்தும் ஷாருக்கான்.. எப்படா ஓடுவோம் என்று காத்திருக்கும் அட்லி

இயக்குனர் அட்லி முதல் முறையாக பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் இப்படத்தின் டைட்டில் லயன் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்திற்காக அட்லி கடந்த இரண்டு வருடங்களாக தனது குடும்பத்துடன் மும்பையில் தங்கியுள்ளார். முதலில் கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. அதன்பின் ஷாருக்கானின் மகன் சில சர்ச்சை வழக்குகளில் சிக்கியதால் ஷாருக்கான் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

இதனாலும் அட்லி படப்பிடிப்பு நடத்த முடியாமல் சிறிது காலம் தள்ளிப் போட்டார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் ஷாருக்கான் ஷூட்டிங்கில் உள்ள போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.
இப்போது ஒருவழியாக அட்லீ படத்தை கிட்டதட்ட முடித்துவிட்டார்.

ஆனால் ஷாருக்கான் இப்போது அந்த படத்தில் எடுக்கப்பட்ட இந்த ஏரியா சரியில்லை, அந்த ஏரியா சரியில்லை என இழுத்தடித்துக் கொண்டே போகிறாராம். இதனால் தற்போது சூட்டிங் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருகிறதாம்.

என்ன செய்வதென்று தெரியாமல் தற்போது முழித்துக்கொண்டு இருக்கிறாராம். வருடத்திற்கு ஒரு படமாவது கொடுத்துவந்த அட்லி பாலிவுட் படத்தை இயக்கப்போகும் ஆசையில் இப்போது இரண்டு வருடம் கழித்தும் அவருடைய படம் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

மேலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் லயன் படமும் அடுத்தாண்டு ரிலீஸ் ஆவதே சந்தேகம் தான். மேலும் லயன் படத்தின் பட்ஜெட் அதிகப்படியாக எகிரி கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதனால் படம் எப்படியும் நிச்சயம் வெற்றி பெற செய்ய வேண்டிய கட்டாயத்தில் அட்லி தற்போது இருக்கிறார்.

Trending News