AK 61 ரிலீஸாகுவதில் ஏற்பட்ட சிக்கல்.. கொஞ்சம் கூட கவலை இல்லாத தல அஜித்!

ajith-ak61
ajith-ak61

தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி தல அஜித்தின் 61 ஆவது படமாக AK 61 படத்திலும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. உடலைக் குறைத்து ஸ்டைலிஷாக மாறியிருக்கும் தல அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.

வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து புனேவில் AK 61 படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார்.

ஆனால் அஜீத் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைட் செய்து கொண்டிருக்கிறார்.வெளிநாடுகளில் இவர் எடுக்கும்  போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்த படம் முதலில் தீபாவளிக்கு வெளியாக இருந்தது

ஆனால் இப்பொழுது இந்த படம் டிசம்பர் மாதம் தான் வெளியாகும் என்று கூறுகின்றனர். இந்த படத்திற்காக அஜித் கிட்டத்தட்ட 52 நாட்கள் கால்சீட் கொடுத்து அவருடைய  பங்களிப்பை முடித்து விட்டார். இப்போது இந்த படத்தில் அஜித்திற்கு இன்னொரு கெட்டப் இருக்கிறதாம்.

அந்த கெட்ட போடுவதற்கு சிறிது இடைவெளி வேண்டுமாம். அதனால்தான் அவர் மன நிம்மதிக்காக வெளிநாடு சுற்றுலா சென்று இருக்கிறார். AK 61 படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், இந்த படம் தீபாவளிக்கு வராது டிசம்பர் மாதம் தான் வரும் என்று கூறுகின்றனர்.

ஆனால் டிசம்பர் மாதத்தில் இந்தப்படம் வெளியானால் வெளிநாடுகளில் கம்மியான வசூலை தான் கொடுக்கும் என்று கூறுகின்றனர் விநியோகஸ்தர்கள். ஏனென்றால் டிசம்பர் மாதத்தில் அங்கே  கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அதனால் இந்தப் படம்  டிசம்பர் மாதத்தில் வெளியாவதிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement Amazon Prime Banner