திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மொத்த நாடே எதிர்பார்க்கும் கோட் ரிலீஸ்-க்கு வந்த தலைவலி.. லியோ போல் வசூலில் விழப்போகும் அடி

Vijay – Goat : விஜய் நடிப்பில் கடைசியாக எதிர்பார்த்த லியோ படம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதற்கு காரணம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது தான். இந்நிலையில் லியோ படம் செய்யாத வசூலை அடுத்த படமான கோட் கலெக்ஷன் செய்து விட வேண்டும் என விஜய் நம்பிக்கையில் இருக்கிறார்.

வெங்கட்பிரபு, விஜய் இருவரும் முதல் முறையாக கூட்டணி போட்டுள்ள இந்த படத்தில் மைக் மோகன், சினேகா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளான வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தனர்.

இதற்கு கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். ஏனென்றால் படத்தின் வசூலை அதிகரிக்க வேண்டும் என்பதால் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு கோட் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை ஆகியவற்றை எண்ணி கோட் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

Also Read : கட்சி மாநாட்டுக்கு தேதி குறித்த விஜய்.. வேறொரு ரூட்டில் ஸ்பீடு எடுக்கும் அஜித்

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஆகஸ்ட் 15 வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஆகையால் மொத்த நாடே எதிர்பார்க்கும் கோட் படத்தின் ரிலீஸ் தேதியில் புஷ்பா 2 வெளியாவதால் வசூலில் பாதிப்பு ஏற்பட இருக்கிறது. லியோ படமே ஆயிரம் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது கோட் படத்தின் வசூலில் பெரிய அளவில் சரிவை சந்திக்க கூடும். ஆகையால் கோட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : இந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 6 ஹிட் படங்கள்.. அஜித்துக்கு ஒரு பில்லானா, விஜய்க்கு என்ன தெரியுமா?

Trending News