திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தை விட 6 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய விஜய்.. அதைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்

Vijay-Ajith: இப்போது அஜித், விஜய் இரு நடிகர்களும் ரசிகர்களால் ஒரே தரத்தில் வைத்து தான் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் விஜய் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தான் அஜித் சினிமாவுக்குள் நுழைந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அப்போது விஜய்க்கு இருந்த அளவுக்கு அஜித்துக்கு மார்க்கெட் இல்லை. மிகவும் பரிச்சியம் இல்லாத நடிகர் என்பதால் அவரது சம்பளமும் குறைவாகத்தான் இருந்தது. இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று இப்போது இயக்குனர்கள் பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.

Also Read : LCU இல்லாத புதிய கூட்டணி.. அஜித்திற்கு வலை வீசும் சூப்பர் ஸ்டார்

ஆனால் ஆரம்ப கட்டங்களில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்து வெளியான படம் தான் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் அஜித் மற்றும் விஜய் வாங்கிய சம்பளம் தான் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அந்த வகையில் விஜய்க்கு கிட்டத்தட்ட 3 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் மிகவும் குறைவாக அஜித்துக்கு பேசப்பட்ட சம்பளம் வெறும் 50 ஆயிரம் மட்டும் தான். அதிலும் அஜித்துக்கு படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே 20000 முன் பணம் ஆக கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு தனது அம்மாவின் உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 5000 தொகையைப் பெற்றிருந்தார்.

Also Read : ஷாலினியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அஜித்தின் மகள்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோ

அதன் பிறகு மீதமுள்ள 25 ஆயிரம் தொகையை தயாரிப்பாளர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம். விஜய்க்கும் இதே மாதிரி ஏமாற்ற முயற்சி செய்தபோது அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மிகப்பெரிய ஆள் என்பதால் சாமர்த்தியமாக பேசி சம்பளத்தை வாங்கி விட்டார். இதில் ஏமாந்தது என்னவோ அஜித் தான்.

ஆனாலும் ஏமாற்றம் என்பது அஜித்துக்கு கிடையாது. ஏனென்றால் அவர் அப்போது சரியான தொகையை சம்பளமாக கொடுத்து இருந்தால் கண்டிப்பாக அஜித் முன்னணி நடிகராக வலம் வந்த பிறகு வாய்ப்பு கொடுத்து இருப்பார். ஆனால் பழசை மனதில் வைத்து அதன் பிறகு அந்த தயாரிப்பாளரை அஜித் ஒதுக்கி விட்டார்.

Also Read : அஜித்திடம் ஓவர் கறார் காட்டும் லைக்கா.. பிள்ளை பெறுவதற்கு முன் பேர் வைத்தால் கதி இதுதான்

Trending News