வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கங்குவாவின் மொத்த பயத்தையும் சல்லி சல்லியாக நொறுக்கிய தயாரிப்பாளர்.. பெருமூச்சு விட்ட லியோ, ஜெயிலர் படக்குழு

Kanguva: கடந்த ஞாயிற்றுக்கிழமை சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது. 3டி தொழில்நுட்பம் கொண்டு 10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பல மடங்கு அதிகரிக்கும் வகையில் இருந்தது அந்த வீடியோ. அதன் மூலம் பலரையும் மிரட்டிய சூர்யா லியோ ஜெயிலர் பட குழுவை கூட ஆட்டம் காண வைத்தார். அதைத் தொடர்ந்து கங்குவாவின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் இப்போது காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

Also read: ஏழாம் அறிவா, காஷ்மோராவா.? கங்குவா கெட்டப்புக்காக ரிஸ்க் எடுத்த சூர்யா.. ஊறுகாய் போல் பயன்படுத்திய சிவா

இப்படி பலருக்கும் சூர்யா காட்டிய பயத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் சல்லி சல்லியாக அடித்து நொறுக்கி இருக்கிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் கங்குவா படத்தில் காட்டப்படும் வரலாற்று பகுதிகள் படத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என்று கூறி ஷாக் கொடுத்திருக்கிறார்.

மேலும் சமகாலத்தில் நடைபெறும் கதையாக இருக்கும் இப்படத்தில் சூர்யா தற்போதைய காலத்தில் இருக்கும் தோற்றத்திலும் வருவார். அதன் படப்பிடிப்பு கோவாவில் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also read: ஜெயிலர் டைட்டிலுக்கு வந்த சோதனை.. கொசு தொல்லையால் பெயரை மாற்றும் முயற்சியில் நெல்சன்

ஏனென்றால் சமீபத்தில் வெளியான அந்த வீடியோவில் சூர்யாவின் தோற்றம் தான் பலரையும் மிரட்டியது. அதைப் பார்த்து ஜெயிலர் மற்றும் லியோ படக்குழுவினர் கூட அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஆனால் தற்போது தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள இந்த செய்தி அவர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

பிளாஷ்பேக் காட்சிகளாக மட்டுமே வரலாற்று கதை வர இருப்பது ரசிகர்களையும் பயத்தில் உறைய வைத்திருக்கிறது. மேலும் சிறுத்தை சிவா ஏதாவது சொதப்பி விடாமல் இருக்க வேண்டும் என இப்போதே சூர்யா ரசிகர்கள் வேண்டுதல் வைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் கங்குவா இப்போது எதிர்பார்ப்பையும், பரிதவிப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

Also read: 15 வினாடியில் மாயமான ஆடியோ லாஞ்ச் டிக்கெட்டுகள்.. சன் பிக்சர்ஸை நம்பாமல் தலைவராக ரஜினி செய்யும் வேலை

Trending News