வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட கமல் அண்ட் கோ.. கடும் கோபத்தில் ஆப்பு வைக்க ரெடியாகிய தயாரிப்பாளர்

அடுத்தடுத்த திரைப்படங்களில் தற்போது பிஸியாகி உள்ள கமல்ஹாசன் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பல பிரபலங்கள் முன்னிலையில் அவர் கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். பல பிரபலங்கள் பங்கேற்ற அந்த நிகழ்வில் ஒரே ஒரு பிரபலம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

ஏனென்றால் அவருக்கு கமல் மீது தீராத ஒரு கோபம் இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் தற்போது கமலுக்கு நெருக்கமாக மாறி இருக்கும் லைக்கா சுபாஷ்கரன் கமல் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் விழாவுக்காக இந்தியாவிற்கு வந்த அவர் கமலின் பிறந்தநாளையும் முடித்துவிட்டு தான் லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

Also read:லைக்காவால் மன வேதனையிலிருக்கும் மணிரத்தினம்.. நைட் பார்ட்டியில் நடந்த கசமுசா வேலை

ஆனால் அவர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. ஏனெனில் கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தான் பரவி வந்தது.

ஆனால் திடீரென இப்படி ஒரு டிவிஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு ஏன் லைக்கா நிறுவனம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் மணிரத்னம் இப்படி ஒரு ஐடியாவில் இருப்பது கூட அவர்களுக்கு தெரியாதாம். இப்படி ஒரு விஷயத்தை கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் சேர்ந்து தன்னிடம் மறைத்து விட்டார்களே என்ற வருத்தம் சுபாஷ்கரனுக்கு அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக அவர் மணிரத்தினத்திற்கு கிட்டத்தட்ட 60 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து தயாரிப்பின் லாபமும் 60 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று இந்த பட உரிமையை வாங்குவதற்காக கமலுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கைமாறி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தை என்னிடம் ஏன் கூறவில்லை என்றும் வேறு ஒரு தயாரிப்பாளரிடம் ஏன் செல்ல வேண்டும் என்ற கோபமும் அவருக்கு இருக்கிறது.

Also read:ஆண்டவரால் அப்சட்டான போட்டியாளர்.. மீண்டும் பழைய எனர்ஜியுடன் கம்பேக் கொடுத்து அசத்திய ரவுடி பேபி

கமலின் 234வது திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து மகேந்திரன் மற்றும் சிவ ஆனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். அவர்கள் தன்னுடன் ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்ற வருத்தமும், கோபமும் சுபாஷ்கரனுக்கு இருக்கிறது. மேலும் அவர் தன் சிஇஓ தமிழ் குமரனிடம் ஏன் இந்த படத்தை விட்டு விட்டீர்கள் என்று கோபமாக கேட்டிருக்கிறார்.

இதனால் மனமுடைந்து போன சுபாஷ்கரன் இரண்டு, மூன்று நாட்கள் சென்னையில் தங்க வேண்டிய பிளானை மாற்றிவிட்டு லண்டன் திரும்பி இருக்கிறார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தன்னை கழட்டிவிட்ட கமல் அண்ட் கோ விற்கு எதிராக அவர் ஒரு பக்கா பிளான் போட்டு வைத்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read:நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட பெரிய தலைகள்.. பொன்னியின் செல்வன் டீம் விடிய விடிய அடித்த கூத்து

Trending News