ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அமீர் பட தயாரிப்பாளர் விட்ட ஒரு கோடி சவால்.. உண்மை சம்பவத்தால் இந்தியாவில் படம் வெளியிட எதிர்ப்பு

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அமீர் இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆத்மா பாவா என்பவர் இயக்கிய, தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஆத்மா பாவா தற்போது ஒரு சவால் விட்டுள்ளார்.

இந்தச் சமயத்தில் இணையத்தில் ஒரு விஷயம் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது. அதாவது இந்தியில் தி கேரளா ஸ்டோரி என்ற படம் உருவாகியுள்ளது. மேலும் சிதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சித்தி இத்தானி, சோனியா பாலானி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Also Read : பாதியிலேயே கைவிடப்பட்ட படத்தை மீண்டும் எடுக்கும் அமீர்.. சூர்யாவிற்கு வைக்கப் போகும் பெரிய ஆப்பு

இப்படம் வருகின்ற மே 30ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்போது அந்த ட்ரெய்லர் தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்திலேயே இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என சொல்லப்பட்டது.

அந்த ட்ரெய்லரில் இந்து பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாக காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போல் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்களும் இதில் சிக்கியுள்ளதாக அந்த கதையை உருவாக்கியுள்ளனர்.

Also Read : ரஜினி எல்லாம் ஒரு சிறந்த நடிகரா?. விருது கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசிய அமீர்

இதனால் கேரளா மக்கள் இந்த படத்திற்கு எதிராக பொற்கொடி தூக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் இது உண்மைச் சம்பவம் என்று சொன்னது மட்டுமல்லாமல், மதநல்லிணத்திற்கு கெடு விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அமீர் பட தயாரிப்பாளர் ஆதம் பாவா தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் இந்த கதை உண்மை என்று நிரூபித்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக சவால் விட்டுள்ளார். இவ்வாறு பல பிரபலங்கள் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : கனவு படத்தை இயக்க ஆசைப்படும் அமீர்.. தளபதி மனசு வச்சாதான் உண்டு

Trending News