புதன்கிழமை, ஜனவரி 22, 2025

உண்மையான பச்சோந்தி யாரு தெரியுமா.? அமீர் செஞ்ச ஒரே தப்பை சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர்

Gnanavel- Aamir Issue: இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாக்கும் இடையேயான மோதல் 16 ஆண்டுகளாகவே நடக்கிறது. அதிலும் அமீர் குறித்த தயாரிப்பாளர் ராஜா பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பல வருடங்களாக பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர், சூர்யாவை வைத்து இயக்கிய மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பின்னர் சூர்யாவின் தம்பி கார்த்தியை தனது பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அப்போதிலிருந்தே அமீருக்கும் சிவக்குமார் குடும்பத்தினருக்கும் நல்ல நட்பு இருந்தது. மேலும் பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல் ராஜா தயாரித்தார்.

ஆனால் படம் முடியும்போது அவருக்கும் அமீருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் 2ம் பாதி முழுவதையும் அமீர் பொறுப்பேற்று தயாரித்து முடித்தார். இதற்கு அவர் தன்னுடைய நண்பர்களிடம் கடன் வாங்கி தனக்கு பிடித்தது போல் படத்தை எடுத்து வெளியிட்டார். ஆனால் பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அமீர் தன்னை ஏமாற்றி விட்டார், அவர் ஒரு திருடன் என தரக்குறைவான வார்த்தைகளால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சித்திருந்தார்.

Also Read: அமீரை கொச்சைப்படுத்திய ஞானவேலுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து குத்திய பொன்வண்ணன்.. உச்சகட்ட அவமானம்

அமீர் செய்த ஒரே தவறு

ஆனால் ஞானவேல் ராஜா தான் உண்மையான பச்சோந்தி. சினிமாவை தெரியாமல் தமிழ் இண்டஸ்ட்ரிக்குள் வந்தவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் 20 முதல் 30 லட்சம் என்றுதான் கொஞ்சம் கொஞ்சமாக படத்தை தயாரிக்க கொடுப்பார். அதுவும் மதுரை அன்புச் செழியன் இடம் இருந்து தான் கடன் வாங்கி படம் எடுத்தார். சிவக்குமார் குடும்பத்திற்கும் ஞானவேல் ராஜாவிற்கும் எந்த உறவும் கிடையாது. ஆனால் ஒரே ஊர்காரர்கள் அவ்வளவுதான்.

இயக்குனர் அமீர் ஏமாற்றக்கூடிய ஆளெல்லாம் கிடையாது, அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சியை தத்ரூபமாக எடுக்க வேண்டும் என நிறைய செலவு செய்வார். அதுதான் அவர் செய்யும் தவறு, வேறு எதுவும் இல்லை. அதை தவிர அமீர் ரொம்ப நல்ல மனுஷன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அமீர் என்று தயாரிப்பாளர் டிஆர் ரமேஷ் சமீபத்திய பேட்டியில் ஞானவேல் ராஜாவின் முகத்திரையை கிழித்து விட்டார்.

அதுமட்டுமல்ல சிவக்குமார் குடும்பத்தினருக்கு அமீர் செய்த நன்றி எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை. அதை எல்லாம் மறந்து விட்டார்கள், அவர்களுக்கு வேண்டியது சினிமாவில் எப்படியாவது மேல வரவேணும் என்பதுதான். யாருக்குமே உதவி செய்யும் எண்ணமும் அவர்களுக்கு கிடையாது. அகரம் அறக்கட்டளை எல்லாம் வெளியுலகத்திற்காக செய்து கொண்டிருக்கும் கண்துடைப்புதான் என்று சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் தயாரிப்பாளர் டிஆர் ரமேஷ் வெளுத்து வாங்கி விட்டார்.

Also Read: திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்பம்.. ஞானவேல் ராஜாவின் நரி தந்திரம்

Trending News