Nayanthara: சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்தது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் யோகி பாபு, ரெஜினா போன்ற பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுந்தர் சி யின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இப்படம் அமைய உள்ளது.
இந்த சூழலில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா பாதி சம்பளம் தான் வாங்கி இருக்கிறாராம். மேலும் மீதி சம்பளத்திற்கு அவர் கேட்டிருப்பது தான் தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அதாவது படம் வெளியான பிறகு வரும் லாபத்தில் பங்கு கேட்டிருக்கிறாராம்.
நயன்தாரா போட்ட கண்டிஷனால் ஆடி போனா தயாரிப்பாளர்
பொதுவாகவே ரஜினி, விஜய் போன்ற டாப் நடிகர்கள் தான் தங்கள் படங்கள் வெளியான பிறகு அதில் லாபத்தில் பங்கு கேட்பது வழக்கம். ஆனால் நயன்தாரா இவ்வாறு கேட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏனென்றால் ஒரு காலத்தில் நயன்தாராவுக்கு பெரிய மார்க்கெட் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஜவான் ஹிட்டு அடித்தது.
தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கடந்த சில வருடங்களில் நயன்தாரா படங்கள் எதுவும் அமையவில்லை. இப்படி இருக்கும் சூழலில் படத்தின் லாபத்தில் பங்கு கேட்பது எவ்வாறு சரியாக இருக்கும் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.