வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தலையாட்டி பொம்மையாய் மாறிய விக்கி.. நயன் புருஷனால் கடுப்பில் தயாரிப்பாளர்

Vignesh Shivan: கடந்த ஒரு வாரமாகவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர். தனுசுக்கு எதிராக இவர்கள் கொடுத்த மூன்று பக்க அறிக்கை தான் இப்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆவணப்படம் என்ற பெயரில் தன்னுடைய கல்யாண வீடியோவை வைத்து பல கோடி சம்பாதித்து விட்டார் நயன். ஆனால் நானும் ரவுடிதான் படக் காட்சிகளை வைக்க தனுஷ் அனுமதிக்காததால் மொத்த வன்மத்தையும் வெளிப்படையாக கொட்டி தீர்த்தார்.

அது ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் ஆவணப்படம் தேவையில்லாத ஆணி என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. அதே சமயம் விக்னேஷ் சிவன் குறித்தும் சில செய்திகள் காத்து வாக்கில் கசிந்து வருகிறது.

அதில் அவர் தற்போது இயக்கி வரும் LIK பட தயாரிப்பாளர் லலித் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் உடன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இயக்குனரை கடுப்பேத்தும் விக்கி

ஆனால் லலித் தான் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் சூட்டிங் இன்னும் 50% கூட முடிவு பெற வில்லையாம். அந்த அளவுக்கு விக்கி மெத்தனம் காட்டுவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர் இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார். ஏனென்றால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்த பிறகு ரீல்ஸ் போடுவது வெளிநாடுகளில் டூர் அடிப்பது என பிஸியாக இருக்கிறார்.

அதற்கு முன்பே அஜித் பட வாய்ப்பு கைவிட்டு போனதற்கும் இவருடைய ஆர்வம் இன்மை கூட காரணமாக இருக்கலாம் என பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் நிலைமையும் பார்த்தால் விக்கி நயன் புருஷனாக மொத்தமாக மாறிவிட்டாரோ என திரை உலகில் கிண்டலான பேச்சும் எழுந்துள்ளது.

ஏற்கனவே புருஷனை நயன் தலையாட்டி பொம்மை போல் ஆட்டி வைப்பதாக கருத்து இருக்கிறது. வெளியிடங்களில் கூட இது அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் விக்கி இயக்குனராக ஜெயிப்பாரா என்பது கேள்விக்குறி தான்.

Trending News