வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிம்பு மீது கடும் கோபத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்.. கமல் நீங்களுமா இதற்கு உடந்தை

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைந்தது. மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்னும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு விஷயத்தை செய்தார். அதாவது கமல் மற்றும் சிம்பு இருவரும் விழா நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்தார்.

Also read:முரட்டுத்தனமான வெயிட்டால் எல்லா பக்கமும் பறிபோன வாய்ப்பு.. பழைய சிம்புவாக மாறிய நடிகர்

இது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆனது. மேலும் இதை பார்த்து மற்ற ஹீரோக்களும் வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வது என்று திரையுலகில் சில சலசலப்பும் ஏற்பட்டது. அவ்வளவு அலப்பறையுடன் நடத்தப்பட்ட இந்த விழா அரங்கில் ஹெலிகாப்டர் மூன்று முறை வந்து வட்டமிட்டது.

உண்மையில் அந்த ஹெலிகாப்டரில் கமல், சிம்பு இருவரும் வரவே இல்லை. அவர்கள் இந்த ஆடம்பரம் எல்லாம் வேண்டாம் என்று தங்களுடைய காரிலேயே வந்து இறங்கினார்கள். இதனால் தயாரிப்பாளருக்கு சிம்பு மீது சிறு மனவருத்தமும் ஏற்பட்டிருக்கிறது.

Also read:உங்க கூட ஒரு படம் நடிக்கணும்.. சிம்புக்கு மேடையில் ஷாக்கான பதில் கொடுத்த கமல்

ஏனென்றால் அந்த ஹெலிகாப்டர் ஏற்பாட்டிற்காக அவர் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்ததை சிம்பு வேண்டாம் என்று மறுத்தது அவருக்கு கோபத்தை வரவைத்துள்ளது. ஆனாலும் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

அதன் பிறகு இவ்வளவு பணமும் வீணாக போய் விடக்கூடாது என்று ஐசரி கணேசின் பிள்ளைகள் அந்த ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்களாம். இதன் மூலம் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் என்று பேசப்பட்ட சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

Also read:கமலுக்கு ஒரே படத்தில் 100 கோடி சம்பாதிச்சு கொடுப்பேன்.. லோகேஷ் கூறிய ஷாக்கான காரணம்

Trending News