வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

கமலை தூக்கிவிட்ட மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்.. 30 வருடமாய் வாய்ப்பு தராததால் OTT-க்கு சென்ற அவல நிலை

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூட வைத்த உலகநாயகன் ஓடிடியில் ரி-என்ட்ரி கொடுத்து அசத்தல். உலகநாயகன் கமலஹாசன் தனது 5 வயதிலிருந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம், கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூல் சாதனை படைத்த நிலையில், இவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் லைன் கட்டி நிற்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் கமலஹாசன் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

Also Read : தீபாவளிக்கு வெளிவந்து வெள்ளி விழா கண்ட கமலின் 6 படங்கள்.. சரித்திரத்தை புரட்டிப் போட்ட வேலு நாயக்கர்

இதனிடையே உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக கமலின் நடிப்பில் படத்தை தயாரிக்காமல் உள்ளதற்கான காரணம் அண்மையில் வெளியாகி உள்ளது. ஏ.வி. மெய்யப்பன் அவர்களால் தொடங்கப்பட்ட ஏ.வி.எம் நிறுவனத்தின் மூலமாக பல திரைப்படங்கள் இயற்றப்பட்டு திரையில் வெற்றிநடை போட்டன.

அதேபோல 80 காலகட்டங்களில் கமலஹாசனின் பல திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் கமலஹாசனின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான பேர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

Also Read : முதல் படத்திலேயே சக்கை போடு போட்ட 5 நடிகைகள்.. கமல்ஹாசனால் சினிமாவை விட்டே ஓடிப்போன நடிகை

இத்திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்துடன் கமலஹாசன் நடிக்க வேண்டும் என ஏ.வி.எம் தெரிவித்திருந்தது. ஆனால் கமலஹாசன் அன்றைய காலக்கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்ததால் கால்ஷீட் பிரச்சனை, சம்பளம் பிரச்சனை என பல கருத்து வேறுபாடுகள் ஏ.வி.எம் நிறுவனத்துடன் கமலஹாசனுக்கு நிலவி வந்துள்ளதாம்.

இதன் காரணமாக இந்நிறுவனம் இன்றுவரை கமல்ஹாசனின் நடிப்பில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக எந்த திரைப்படங்களையும் தயாரிக்காமல் உள்ளது. அண்மையில் ஏ.வி.எம் தயாரித்த தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : கமலே எதிர்பார்க்காமல் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. கடனாளியாக தத்தளித்தது தான் மிச்சம்

- Advertisement -spot_img

Trending News