வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் வாய்ஸ்க்கு தடையாக இருந்த தயாரிப்பாளர்.. கூடவே இருந்து உதவிய நடிகை

Ajith: தன்னம்பிக்கையுடன் தலைக்கனம் இல்லாமல் சினிமாவில் ஜெயித்த நடிகர்களில் ஒருவராக அஜித் எப்பொழுதுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில் ஆரம்ப கட்டத்தில் இவருக்கு எந்தவித சப்போர்ட்டும் கிடைக்காமல் பல வழிகளில் தோல்வியையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய வாய்ஸ் கொடுத்து நடிப்பதில் சில தடங்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது ஆரம்பத்தில் கிடைக்கும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த இவர் ஆசை என்கிற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் அஜித்துக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது நடிகர் சுரேஷ். அப்பொழுது சுரேஷ் டப்பிங் வாய்ஸ் கொடுத்ததினால் தான் படமே ஹிட் ஆயிட்டு என்ற பேச்சுக்கள் அடிபட்டிருக்கிறது.

இதனால் கொஞ்சம் அப்செட் ஆன அஜித், அடுத்த படமான வான்மதி படத்திற்கு நானே வாய்ஸ் கொடுக்கிறேன் என்று இயக்குனர் அகத்தியனிடம் சொல்லி இருக்கிறார். அதே மாதிரி இயக்குனரும் அஜித்தை வைத்து டயலாக்கை பேச வைத்திருக்கிறார். ஆனால் இவர் பேசுவது ஒன்றுமே புரியவில்லை, சுத்தமாக எனக்கு பிடிக்கவும் இல்லை. தயவு செய்து அஜித்தை பேச வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என்று இயக்குனரிடம் தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

Also read: அஜித்திடம் இருக்கும் தரமான குணம்.. இதை மட்டும் கத்துக்கிட்டா விஜய் தான் அடுத்த CM

ஆனால் இந்த விஷயத்தில் அஜித் நான் வாய்ஸ் கொடுக்கிறேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்றால் டப்பிங் வாய்ஸ் யாராவது கொடுத்தால் எந்த ஹீரோவும் பெரிய அளவில் வளர முடியாது என்பதால் அஜித்துக்கு ஒரு பயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் படப்பிடிப்பு நேரத்தில் அஜித் ரொம்பவே வருத்தத்தில் இருந்திருக்கிறார்.

பின்பு இதனை எல்லாம் கவனித்த நடிகை வடிவுக்கரசி, தயாரிப்பாளரிடம் சென்று அஜித்துக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பாருங்கள். கண்டிப்பாக அவர் பேசினால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று தயாரிப்பாளரிடம் பரிந்துரை செய்திருக்கிறார். அதன் பின்னே தயாரிப்பாளர் வேண்டா வெறுப்பாக அஜித் வாய்ஸ் கொடுப்பதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இயக்குனர் அகத்தியனும், அஜித்தை வான்மதி படத்திற்கு ஓன் வாய்ஸ் கொடுக்க வைத்திருக்கிறார். பிறகு படத்தை ரிலீஸ் செய்து ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிய நிலையில் எதிர்பாராத திருப்பமாக படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அதன் பின்னே அஜித் அவருடைய படங்கள் அனைத்திற்கும் சொந்த குரலில் பேச ஆரம்பித்து விட்டார். இப்படி ஆரம்ப காலத்தில் நிறைய தடங்கல்களை தாண்டி வந்த பிறகே தற்போது முன்னே நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்க முடிந்திருக்கிறது.

Also read: அதிகாரப்பூர்வமாக அஜித் இயக்குனரை கழட்டிவிட்ட கமல்.. மீண்டும் கார்த்திக்கிடம் தஞ்சம்

Trending News