Bigg Boss Balaji Murugadoss: ஒருவரிடம் எவ்வளவு திறமை கொட்டி கிடந்தாலும் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மட்டுமே சரியான அங்கீகாரம் கிடைக்கும். அப்படி ஒரு அங்கீகாரத்துக்கான மேடை தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எத்தனையோ பேர் பெருசாக வளந்திருக்கவும் செய்து இருக்கிறார்கள். சிலர் இருக்கும் இடம் தெரியாமல் தடம் புரண்டும் போயிருக்கிறார்கள்.
அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடைய உண்மையான கேரக்டர் மக்களுக்கு ஒத்துப்போனால் மட்டுமே அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அதனால் யாருக்கு என்ன நிலைமை எப்படி மாறும் என்று தெரியாத ஒரு கண்கட்டி வித்தையாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
ஏமாற்றத்தால் பாலாஜி எடுத்த முடிவு
ஆனாலும் இவருக்கு மக்கள் ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்ததால் ஸ்பெஷல் எபிசோடில் வந்து டைட்டில் வின்னர் ஆகி சிம்பு கையில் விருதை பெற்றார். அதற்கு காரணம் அடாவடித்தனமான கோபமும், பாசத்திற்கு ஏங்கிப் போன ஒரு மனிதராகவும் மக்களிடம் பிரபலமானார். அந்த வகையில் உள்ளே இருப்பவர்களை வச்சு செய்யும் அளவிற்கு ரக்டுபாயாக இவருடைய கேரக்டர் இருந்தது.
இருந்தாலும் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் மூலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இவர் முதல் முறையாக நடித்த படம் தான் ஃபயர். இப்படத்தை அறிமுக இயக்குனராக நுழைந்திருக்கும் சதீஷ்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் இவருடன் சேர்ந்து ரக்ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி கே இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் கதையாவது நான்கு பெண்களின் நிலைமையும், பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால் அவர்களை எப்படி பாதுகாப்பாக வளர்க்கிறோம் என்பதை பற்றி கேள்வி எழுப்பும் விதமாக தான் இப்படம் ஒரு மக்களிடம் விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தின் கதை ஒன்றை அடிப்படையாக உருவாக்கப்பட்டதாக இயக்குனர் சதீஷ்குமார் பேட்டி எடுத்திருக்கிறார்.
இதில் பாலாஜி முருகதாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் இவருக்கு கொடுக்கும் வரவேற்பின் மூலம் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாலாஜி அவருடைய எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்து இருக்கிறது. அதாவது இவர் நடித்த ஃபயர் படத்திற்காக இன்னும் வரை ஒத்த ரூபா கூட சம்பளமாக பெறவில்லை.
இதனால் நான் சம்பளத்தை கேட்டு கேட்டு அழுத்து போய்விட்டேன். ஆனால் தயாரிப்பாளர்கள் பக்கத்தில் இருந்து எந்த வித பதிலும் வராததால், நான் சினிமாவை விட்டு ஒரேடியாக விலகலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். எனக்கு இந்த சினிமா செட் ஆகாது. என்னால் முடியவில்லை நான் தோற்று விட்டேன். என்னை எல்லோரும் ஏமாத்திடறாங்க என்று எக்ஸ் வலைதளத்தில் I am out of cinema… I gave up என பதிவிட்டு இருக்கிறார்.
இவர் போட்ட பதிவுக்கு ரசிகர்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மன உறுதியுடன் சில விஷயங்களை கடக்க முயற்சி பண்ணுங்கள் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள். எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ரக்டுபாயாக இருந்த பாலாஜியை ஒத்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் கதறவிட்டார் என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களின் அப்டேட்
- கவினை போல பிக் பாஸ் ராஜுக்கு அடித்த ஜாக்பாட்
- மோந்து பார்த்தாலே போதும், சோலி முடிஞ்சு
- வரப்போகுது பிக்பாஸ் சீசன் 8