வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சொல்லியும் அட்லீயை கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்.. காத்திருந்த கொக்குக்கு கிடைத்த விலங்கு மீன்

விஜய் தற்சமயம் லோகேஷ் கூட்டணியில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து இப்போது விறுவிறுப்பாக மீதமுள்ள படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் லியோ படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அதாவது ஏஜிஎஸ் நிறுவனத்துடன் மீண்டும் விஜய் கூட்டணி போட இருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியான கஸ்டடி படம் படுமோசமான தோல்வி அடைந்த நிலையில் விஜய் அவருடன் எப்படி கூட்டணி போடுகிறார் என்ற கேள்வி எழுந்தது.

Also Read : பொறாமையால் ராஜமௌலியை அவமானப்படுத்திய விஜய் பட நடிகை.. தென்னிந்திய சினிமாவிற்கு இப்படி ஒரு அவமானமா!

அதாவது ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தது. அதேபோல் அந்த நிறுவனத்தின் கையில் விஜய்யின் டேட்டும் வைத்திருந்தனர். விஜய் சன் பிக்சர்ஸ் பக்கம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்தை தான் விஜய் தேர்ந்தெடுத்திருந்தார். தளபதி 68 படத்தை அட்லீயை வைத்து இயக்க தான் விஜய்க்கு ஆசை இருந்துள்ளது. பிகில் படத்தால் இந்நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை வெளிப்படையாகவே அந்நிறுவனர் கூறியிருந்தார்.

Also Read : விஜய், அஜித்துக்கு இணையாக வசூலை அள்ளிய சூரி.. விடுதலை படத்தின் மொத்த கலெக்ஷன் இதுதான்

இதனால் மீண்டும் அட்லீயை நம்பி முதலீடு செய்ய தங்களுக்கு விருப்பமில்லை என விஜய்யிடம் ஏஜிஎஸ் நிறுவனம் கூறிவிட்டது. வெங்கட் பிரபு மற்றும் விஜய்யின் டேட் ஒன்றாக கிடைத்ததால் கரெக்டாக துண்டு போட்டுவிட்டது ஏஜிஎஸ் நிறுவனம். அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் கொடுத்த வெங்கட் பிரபு விஜய் படத்தை இயக்க ஆசையாக இருந்தார்.

மேலும் காத்திருந்த கொக்குக்கு விலங்கு மீன் கிடைத்தது போல இந்த வாய்ப்பை வெங்கட் பிரபு சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். தளபதி 68 மங்காத்தா போன்ற ஜானரில் வெங்கட் பிரபு எடுக்க உள்ளாரா, இல்லை அவருக்கே உண்டான காமெடி கதை களத்தில் எடுக்க உள்ளாரா என்பது இனி தெரியவரும்.

Also Read : விஜய்யின் கண்டிஷனால் நொந்து போன வெங்கட் பிரபு.. மொத்த கனவையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே!

Trending News