
Sun Pictures: பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இப்போது லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தை தயாரித்து வருகிறது. அடுத்ததாக ரஜினியின் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 வையும் இந்த படம் தான் தயாரிக்கிறது.
இது தவிர பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் சன் பிக்சர்ஸ் கைவசம் தற்போது இல்லை. அதேபோல் லைக்காவும் இப்போது நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. லால் சலாம், விடாமுயற்சி என தொடர் தோல்விகளை சந்தித்தது.
இதனால் இந்தியன் 3 படப்பிடிப்பை கூட நடத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா ஆகிய நிறுவனங்களை ஓரம்கட்டி பெரிய நடிகர்களின் படத்தை அடுத்தடுத்து புக் செய்து வருகிறது டான் பிக்சர்ஸ்.
சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்காவை ஓரம் கட்டிய தயாரிப்பு நிறுவனம்
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தை இந்நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. மேலும் தனுஷின் இட்லி கடை படமும் இதன் கைவசம் தான் இருக்கிறது.
அடுத்ததாக சிம்புவின் படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இது தவிர அடுத்த இரண்டு படங்களையும் புக் செய்து இருக்கிறது டான் பிக்சர்ஸ். அது இரண்டுமே தனுஷின் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசு இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை தயாரிப்பதை டான் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது. அடுத்ததாக தனுஷ் அஜித்தின் படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த முடிந்துள்ளது. இப்படத்தையும் டான் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒரு ஆணி வேராக டான் பிக்சர்ஸ் பதிய இருக்கிறது.