வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சர்ச்சையில் சிக்கி கைதான கஸ்தூரியின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக நடித்தவர் கஸ்தூரி. இவர், ஆத்தா உன் கோயிலியே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் வென்றார்.

சினிமாவில் பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், ரவிக்குமார் என்ற மருத்துவமரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் சிறிது காலம் விலகியிருந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு அருண் விஜயின் மலை மலை படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

அதன்பின், சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலிலும் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் ஆர்வம் காட்டினார். அதன்படி, சின்னத்திரையில் வினாடி வினா வேட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர், பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கேற்று அசத்தினார்.

தெலுங்கு மக்கள் பற்றி அவதூறு பேச்சு – கஸ்தூரி கைது

சமூக ஆர்வலராகவும், அரசியல் தொடர்பான கருத்துகளும் தெரிவித்து வரும் அவர் ஊடக விவாதங்களிலும் காரசாரமாக பேசக்கூடியவர் ஆவார். கடந்த 3 ஆம் தேதி பிராமணவர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கஸ்தூரி தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீஸார் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தலைமறைவான கஸ்தூரி ஐதராபாத் அருகேயுள்ள பப்பலக்குடா பகுதியில் ஒரு தயாரிப்பாளரின் பங்களாவில் தங்கியிருந்த போது சென்னை தனிப்படை போலீசார் அங்கு சென்று நவம்பர் 16 ஆம் தேதி அவரை கைது செய்தனர். தற்போது எழும்பூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கஸ்தூரியின் சொத்து மதிப்பு?

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் கஸ்தூரிக்கு தற்போது 46 வயதாகிறது, இவரது கணவர் மருத்துவர் ரவிக்குமார். இத்தம்பதியர்க்கு சங்கல்ப் என்ற மகனும், சோபினி என்ற மகளும் உள்ளனர். கஸ்தூரிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஒரு படத்தில் நடிக்க அவருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும், சின்னத்திரையில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.30 ஆயிரம் வரையில் சம்பளம் பெறுவதாகத் தகவல் வெளியாகிறது. ஏற்கனவே அவருக்கு சென்னையில் 2 வீடுகளும், அமெரிக்காவில் ஒரு வீடும், ஐதராபாத்தில் ஒரு வீடும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கஸ்தூரிக்கு 15 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கலாம் என உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகிறது.

Trending News