செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கல்யாணம் பண்ணாமலேயே ராஜாவாக சுற்றி வரும் எஸ்ஜே.சூர்யா-வின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா?

Actor SJ Surya: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, மெல்ல மெல்ல இவருடைய கவனம் நடிப்பு பக்கம் திரும்பியது. அதன் வாயிலாக இவர் டைரக்ஷனில் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் படங்கள் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு இல்லாமல், நூற்றில் ஒரு படமாக அமைந்தது.

அதனாலேயே ரொம்பவே துவண்டு போயிருந்த நிலையில் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படம். இப்படத்தில் சிறந்த வில்லனாக இவருடைய கதாபாத்திரத்தை தனித்துவமாக நடித்து விஜய்க்கு இணையாக பெயர் பெற்றார். அதன் பின் மாநாடு படத்தில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பி விட்டார்.

Also read: எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த சம்பவம்

அதிலிருந்து இனிமேல் எந்த மாதிரி கதையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று புரிந்து கொண்டார். அதன்படி தற்போது இவர் வில்லனாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் தலையை காட்டிக் கொண்டு போகிறார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் இவருடைய ஆசைக்காக தவிர பணம் சம்பாதிப்பதற்காக இல்லை.

ஏனென்றால் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு புகழ், பணம் அனைத்தும் கொடுக்கிறது வில்லன் கேரக்டரில் தான். அதனால் அந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். தற்போது இவர் கைவசம் இருக்கும் படங்கள் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லியோ, கேம் சேஞ்சர் மற்றும் தனுஷ் 50. இதன் வாயிலாக தற்போது இவர் வாண்டட் நடிகராக இவருடைய நிலைமை மாறிவிட்டது.

Also read: வடிவேலு போல இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டே எஸ்ஜே சூர்யா.. செக் வைத்த தயாரிப்பாளர்

அத்துடன் இவர் கமிட் ஆகிய ஒவ்வொரு படங்களுக்கும் சுமார் 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதனாலயே தற்போது இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 150 கோடி வரை உயர்ந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மட்டுமே 4 கோடி வரை சம்பாதிக்கிற அளவுக்கு பிஸியாகிவிட்டார். அத்துடன் சென்னையில் சொந்தமான வீடு, சமீபத்தில் BMW Z4 Roadster Melbourne red சொகுசு காரை வாங்கியுள்ளார்.

இதை தவிர ஆடி கார் உட்பட பல கார்களும் சொந்தமாக வைத்திருக்கிறார். ஆனால் இது எல்லாம் வைத்து தனிக்காட்டு ராஜாவாக கல்யாணம் பண்ணாமலேயே அனுபவித்து வருகிறார். இன்று இவருடைய 55 பிறந்தநாளை கொண்டாடி வருவதால் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அடுத்த பிறந்த நாளுக்கு திருமணம் செய்து குடும்பம் குட்டியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

Trending News