வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வேள்பாரி முதலில் சூர்யாவுக்கான கதை இல்ல.. ஷங்கரின் கனவு பலிக்காமல் போன காரணம் இதுதான்

இயக்குனர் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் 15 ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக வரலாற்று நாவலை பலரும் படமாக எடுத்து வெற்றி கண்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கும் மக்கள் பேராதரவு கொடுத்திருந்தனர்.

ஆகையால் இயக்குனர் ஷங்கரும் வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக எடுக்க திட்டம் தீட்டி உள்ளார். இதற்கான வேலையில் இறங்கி உள்ள ஷங்கர் கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க உள்ளார் என செய்திகள் வெளியானது.

Also Read : இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

இல்லையென்றால் இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என்ற திட்டமும் ஷங்கருக்கு உள்ளதாம். முதலில் இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நம்முடைய நாவலில் வேறு மாநில நடிகர்கள் நடிப்பதற்கு இங்கு எதிர்ப்பு நிலவியது.

ஆகையால் கடைசியில் சூர்யா நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. ஆனால் வேள்பாரி கதையில் கதாநாயகனாக விஜயை நடிக்க வைக்க தான் ஷங்கருக்கு ஆசை இருந்துள்ளது. முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. விஜயின் சம்பளம் மட்டும் இப்போது 100 கோடியை தாண்டி உள்ளது.

Also Read : போதைக்கு அடிமையாகி மார்க்கெட்டை இழந்த சூர்யா பட வில்லன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான்

இதனால் ஹீரோவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதாம். மேலும் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை எடுக்க முடியாது என சன் பிக்சர்ஸ் பின்வாங்கியுள்ளது. ஆகவே தற்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஷங்கர் அணுகி உள்ளார்.

அவர்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுக்க ஒப்புக் கொண்டால் வேள்பாரி படத்தில் விஜய் அல்லது சூர்யா இவர்களுள் ஒருவர் தான் நடிப்பார்கள் என தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் இதற்கான அறிவிப்பை ஷங்கர் வெளியிடுவார்.

Also Read : மணிரத்னத்தை மிஞ்சும் அளவிற்கு கதையை செதுக்கி உள்ள லோகேஷ்.. தளபதி 67-ல் விஜய் செய்யப் போகும் சம்பவம்

Trending News