வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

முத்து சொதப்பியதால் பிக் பாஸ் கொடுத்த தண்டனை.. குருநாதரிடம் கெஞ்சும் போட்டியாளர்கள் பாவமாக நிற்கும் ரயான்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 12 வாரங்கள் ஆன நிலையில் 13வது வாரத்திற்கு இன்று கேப்டன் யார் என்பதற்கான டாஸ்க் ஆரம்பித்தது. அந்த வகையில் கல்லை அடுக்கி கோட்டை கட்ட வேண்டும் என்ற டாஸ்க்கில் மூன்று போட்டியாளர்களாக டீம் சேர்த்து விளையாட ஆரம்பித்தார்கள். இந்த டாஸ்க் யார் பெஸ்ட் என்று சொல்லும் வகையில் பவித்ரா, முத்துக்குமாரன் மற்றும் ஜெஃப்ரி தேர்வாகி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் நல்லா விளையாடவில்லை என்று பெயர் வாங்கிய போட்டியாளர்கள் அன்சிதா மற்றும் சௌந்தர்யா. இதில் சௌந்தர்யா கேம் என்றாலே ஒதுங்கும் அளவிற்கு தான் அவருடைய பங்களிப்பு இருக்கும். ஆனால் அன்சிதா சீரியஸாக விளையாடி இருந்தாலும் ரூல்ஸ் பிரேக் பண்ணி நிறைய டைம் விளையாடியதால் அவரை நல்ல விளையாடவில்லை என்று கணக்கில் எடுத்து விட்டார்கள்.

மேலும் அடுத்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ரயானுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் நன்றாக விளையாடிய மூன்று போட்டியாளர்களான பவித்ரா, ஜெஃப்ரி மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கேப்டன் பதவிக்காக விளையாடுவதற்காக இறங்கி விட்டார்கள். அந்த வகையில் கோல் பால் டாஸ்க் ஆரம்பித்திருக்கிறது. இதில் கோல் போடுவது முக்கியம் மற்றவர்கள் கோல் போடுவதை தடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற வகையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் விளையாடிய பொழுது ஜெப்ரி முதலாவதாக அவுட் ஆகி வெளியே போய் விடுகிறார். அதன் பின் பவித்ரா மற்றும் முத்துக்குமார் விளையாடிய நிலையில் பவித்ரா போடுகிற பாலை வேண்டுமென்றே முத்துக்குமார் தடுக்காமல் விட்டுக் கொடுத்து விட்டார். இதுநாள் அதிரடியாக முடிவெடுத்த பிக் பாஸ் விட்டுக் கொடுத்து விளையாடுவது போட்டியல்ல என்று எத்தனையோ முறை சொல்லி இருந்தாலும் நீங்கள் யாரும் கேட்பதாக இல்லை.

அதனால் தண்டனை கொடுக்கும் விதமாக உங்களுக்கு கேப்டன் டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடையாது என்று அறிவிப்பு கொடுத்து விட்டார்கள். இதைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகிய நிலையில் முத்துக்குமரன் தான் செஞ்ச தவறுக்கு வருந்தும்படி அழுது பிக் பாஸ் இடம் கெஞ்சுகிறார். அத்துடன் பவித்ரா, தன்னால் இப்படி ஒரு விஷயம் நடந்து விட்டது என்று பாவமாக நிற்கிறார்.

இதனை அடுத்து கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என வருத்தத்தில் ரயான் வேற, நாமினேஷன் பிரீ பாஸ் கிடையாது என்று சொன்னதும் பாவமாக நிற்கிறார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மொத்த போட்டியாளர்களும் நாங்கள் தெரியாமல் செய்த ஒரு தவறுக்காக மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சும் படியாக குருநாதரிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

Trending News