தவெக முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்துக் கூறியுள்ளார்.
விஜயகாந்த், ரஜினி, பாக்யராஜ் என 80 களில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி பெற்றவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தனது மகன் விஜயை நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் அறிமுகம் செய்தார். அதன்பின்னர், விஜய் முன்னணி ஹீரோவாவதற்கு அவர் உதவி செய்தார் என்றாலும் விஜயும் தன் கடுமையான உழைப்பின் மூலம் இன்று தளபதியாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் வளர்ந்திருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், அவர் பெயர் ஒரு கட்சியை எஸ்.ஏ. சந்திரசேகர் பதிவு செய்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று விஜய் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். இதன்பின், எஸ்.ஏ.சி மற்றும் அவரது மகன் விஜய் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. விஜய் தன் தாய், தந்தையவிட்டு தனியே பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகின.
அதேசமயம், எஸ்.ஏ.சி விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சித்திருந்தார். பல நேர்காணில் விஜய்யின் படம் ஃபெயிலியர் பற்றியும், புஸ்ஸி ஆனந்த் மீது குற்றம் சாட்டியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிப்ரவரியில் தன் அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்து, சமீபத்தில் கொடிப்பாடல், மற்றும் கொடியை அறிமுகம் செய்திருந்தார். இவ்விழாவில் எஸ்.ஏ.சி மற்றும் விஜயின் அம்மா ஷோபா இருவரும் பங்கேற்றனர்.
விஜய்யின் மாநாடு பற்றிய கேள்விக்கு எஸ்.ஏ.சி டென்சன்
விஜய் தற்போது விஜய்69 படத்தில் நடித்து வருவதுடன், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்ட அக்கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயின் தந்தை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் விஜயின் தவெக முதல் மாநாடு பற்றிக் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் பேசியதாவது; ’’இங்கு கலை சம்பந்தமாக வந்திருக்கிறோம். கலை சம்பந்தமான ஒரு விஷயம் ஆரம்பிக்கிறோம். மற்ற சோசியல் சம்பந்தமாக கேளுங்கள் நான் வெளியில் கூறுகிறேன். தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். பின்னர், வேட்டையன் படம் பார்த்தீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர், திருப்பித் திருப்பி இதையே கேட்கிறீர்கள். யாரையாவது நான் திட்டனும். அதை நீங்க ஃபோகஸ் பண்ணிப் போடனும். யார திட்ட சொல்றீங்க சொல்லுங்க திட்டறேன்’’ என்று காட்டமாகப் பேசினார்.
80 வயதிலும் இயக்குனர்: எடிட்டர் லெனின் விளக்கம்
இடையில் குறுக்கிட்ட எடிட்டர் லெனின், ’’இந்த வயதிலும் எஸ்.ஏ. சி சார் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் கொடைக்கானலுக்கு சென்று ஷூட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு நான் எடிட்டிங் செய்கிறேன். இதன் இசை, எடிட்டிங் இதெல்லாம் பார்க்க 2 மாடி ஏறி தினமும் வருகிறார் எஸ்.ஏ.சி. நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றால் அவர், நானும் வந்து பார்க்கிறேன் என்கிறார்’’ என்று கூறியுள்ளார்