புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஹீரோக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் கேட்கப்படும் கேள்வி.. பிரச்சனையில் சிக்கிய ஜீவா

Jeeva: தான் உண்டு தன் வேலை உண்டு என்று சும்மா இருந்த ஹீரோக்களையும் விட்டு வைப்பதில்லை என்று சொல்லும் அளவிற்கு மலையாள நடிகை, ஹீரோக்கள் மீது கொடுத்த புகார் அடிப்படையில் நாளுக்கு நாள் பிரச்சினை பெருசாகி கொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது இங்கே இருக்கும் ஹீரோக்கள் கூட வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு பத்திரிகையாளர்கள் மைக்கை எடுத்துட்டு அவர்களிடம் முதல் கேள்வியாக கேட்பது இந்த பிரச்சினையை தான்.

மலையாள திரை உலகில் ஏற்பட்ட சர்ச்சையால் அவஸ்தைப்படும் இங்குள்ள ஹீரோக்கள்

இதற்கு எப்படி பதில் சொல்வது என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கும் ஹீரோக்கள் ஒவ்வொருவரும் அவஸ்தைபட்டு வருகிறார்கள். இதில் தான் நடிகர் ஜீவாவும் சிக்கி இருக்கிறார். அதாவது தேனி மற்றும் மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா போயிருக்கிறார்.

அங்கே திறப்பு விழாவை முடித்துவிட்டு ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது பத்திரிக்கையாளர்கள் உள்ளே புகுந்து ஜீவாவிடம் ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் மலையாள சினிமா நடிகை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விகளை பத்திரிக்கையாளர் கேட்டிருக்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜீவா எனக்கு அதைப் பற்றி தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அதாவது அந்த விஷயங்கள் என்ன என்று விவரம் புரியவில்லை என்பதை அப்படி சொல்லி இருக்கிறார். ஆனால் பத்திரிகைக்காரர்கள் விடாமல் நீங்கள் நடிகர் சங்கத்தில் ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு இதை தெரியாது புரியாது என்று சொன்னால் சரியாக இருக்குமா என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

இதனால் கடுப்பான ஜீவா, இப்பொழுது ஒரு நல்ல விஷயத்துக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். அதன்படி எல்லாமே சுமூகமாக முடிந்த நிலையில் அதே மனதிருப்தியுடன் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் இந்த கேள்வியை மறுபடியும் கேட்டு என்னை கடுப்பேற்ற வேண்டாம் என்று பொறுமையாக பதில் அளித்திருக்கிறார்.

ஆனால் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஜீவாவிடம் இந்த கேள்வி கேட்ட நிலையில் ஆவேசமான ஜீவா அவர்களிடம் உங்களுக்கு அறிவு இருக்கிறதா என்று கோபமாக கேட்டிருக்கிறார். இதனால் அங்கு இருந்த பத்திரிகையாளர்களுக்கும் ஜீவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்து விட்டது. இப்படி இங்குள்ள ஹீரோக்களும் வெளியே தலை காட்ட முடியாமல் கேட்கப்படும் கேள்வியால் நடிகர்கள் ஒவ்வொருவரும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

Trending News