வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் லோகேஷ்.. ரிலீசுக்கு முன்பே ஒரு கோடிக்கு பார்ட்டி வைக்கும் பிரபல இயக்குனர்

Tamil Popular Directors: தற்போது இருக்கும் இயக்குனர்களில் அசுர  வளர்ச்சி அடையும் இளம் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களை மட்டுமே இயக்கினாலும் எடுக்கிற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுப்பதால் இவருக்கு மவுசு அதிகமாகிவிட்டது. ரஜினி, கமல், சூர்யா, விஜய் என அடுத்தடுத்து டாப்  நடிகர்கள் எல்லாம் நா, நீ என அடித்துக் கொண்டு இவருடைய படத்தில் நடிக்க விரும்புகின்றனர். 

இப்படி தொடர் வெற்றிகளை ருசிக்கும் லோகேஷ் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். ஆனால் அவருக்கு மாறாக பிரபல இயக்குனர் ஒருவர் ஒரு கோடிக்கு பார்ட்டி வைத்து அளப்பறை செய்கிறார். ஷங்கர் தன்னுடைய 61வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து பகல் முழுவதும் கேக் வெட்டி அனைத்து தயாரிப்பாளர்களும் வந்து சந்தித்து சென்றனர்.

Also Read: எல்லா இயக்குனர்களையும் கைக்குள் போட்டுக் கொள்ளும் ரோலக்ஸ்.. உடன்பிறப்புக்கே செய்யும் பச்ச துரோகம்!

அதிலும் இந்த வருடம் ஷங்கர். முக்கியமாக லைக்கா நிறுவனம் சார்பாக மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அவர்கள் சார்பாகவும் பெரிய அளவில் கேக்கு வெட்டப்பட்டது. இது தவிர முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் நேரிலே வந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். இவர்களுக்கு ஷங்கர் செய்த பார்ட்டி ஒரு இரவு  செய்த செலவு கேட்டால் தலையை சுற்றும்.  அடுத்த வருடம் ஷங்கர் இயக்கியிருக்கும் இரண்டு பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 

தமிழில் உலக நாயகனின் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்ததாக ராம்சரனின் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக பார்க்கப்படும் ஷங்கர் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை இரு படக்குழுவினர்களுடன் கொண்டாடி இருக்கிறார்.

Also Read: 2028 இல் வெளிவர உள்ள லோகேஷன் கடைசி படம்.. ஆண்டவரிடம் சரணாகதி அடையும் பிரம்மாண்ட கணக்கு

அதிலும் தெலுங்கில் அவர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் புகைப்படத்தில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, கதாநாயகன் ராம்சரண் மற்றும் படக்குழுவினரும் உடன் இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப்போது இந்தியன் 2 பட  குழுவினருக்கு இரவு பார்ட்டி கொடுத்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே அந்த பட குழுவினரை சரக்கில் குளிப்பாட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது ஷங்கர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். ஷங்கர் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மற்றும் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு சரக்கு பார்ட்டி வைத்ததில் 1 கோடி பிரம்மாண்டமான பார்ட்டியை வைத்துள்ளார் ஷங்கர். பிரமாண்ட இயக்குனர், இதிலும் பிரம்மாண்டம் செய்து விட்டார். ஆனால் இவரை விட வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருக்கும் இளம் இயக்குனராக இருக்கும் லோகேஷ் இருக்கிற இடம் தெரியாமல் அடக்கி வாசிக்கிறார். 

Also Read: மெர்சலில் பற்ற வைத்த நெருப்பு.. ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர்களின் கல்லாவை நிரப்பிய தளபதியின் 6 படங்கள்

Trending News