Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒழுங்காக இருந்த குடும்பத்திற்குள் பழனியை கட்டிட்டு வந்த சுகன்யா ஓவர் அட்டூழியம் பண்ணுகிறார். இதற்கு கோமதி அண்ணன், சக்திவேல் எவ்வளவோ பரவாயில்லை என்பதற்கு ஏற்ப தான் இருக்கிறது. அதாவது மீனா, சுகன்யாவை கண்டித்ததால் சுகன்யா பாண்டியன் மற்றும் கோமதி இடம் மீனாவைப் பற்றி தவறாக சொல்லி வத்தி வைத்து விட்டார்.
இந்த பாண்டியனும் கோமதியும் அதை நம்பி மீனாவை திட்டி மன்னிப்பு கேட்க வைக்கிறார்கள். மீனாவும் எந்த உண்மையையும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் சுகன்யாவிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்த செந்தில் கோபமாக ரூமுக்குள் போய் விடுகிறார். பின்னாடியே போயி மீனா, நடந்த விஷயத்தை நாம் இப்பொழுது சொன்னால் தேவையில்லாமல் வீட்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
இதனால் அரசி படிப்பும் பாதிப்பாகும் அதனால் இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் சுகன்யா செய்யும் நாரதர் வேலையும் தடுக்க வேண்டும். அதனால் நாம் இரண்டு பேரும் சேர்ந்து பழனி சித்தப்பாவிடம் பேசிட்டு வரலாம் என்று பழனியை பார்த்து பேசுகிறார்கள். அப்பொழுது காலேஜில் நடந்த விஷயத்தையும் அரசிடம் தனியாக சுகன்யா சொன்ன விஷயத்தையும் மீனா சொல்கிறார்.
ஏற்கனவே பழனிவேலுக்கு மட்டும் தான் சுகன்யாவின் உண்மையான சுயரூபம் தெரியும். அதனால் மீனா சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பி சுகன்யாவிடம் பேசுகிறார். அதாவது நீ இந்த குடும்பத்தை பாழாக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தியா? அந்த குமரவேலுக்கும் அரசிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க தான் உன்னுடைய வேலையா? என்று கேட்கிறார். அதற்கு சுகன்யா, மீனாவையும் பழனிவேலுவையும் சேர்த்து வைத்து தப்பாக பேசி விடுகிறார்.
இதனால் கோபப்பட்ட பழனி, சுகன்யாவை அடித்து விடுகிறார். ஏற்கனவே சுகன்யா அடங்காப்பிடாரி மாதிரி தான் இருக்கிறார், தற்போது வாங்கியதால் ராட்ஜசி ஆக மாறி கத்த ஆரம்பித்து விட்டார். உடனே வெளியில் இருப்பவர்கள் அனைவரும் ரூமுக்குள் சென்று என்னாச்சு என்று கேட்கும் பொழுது ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்று நீங்கள் யாருக்கும் சொல்லிக் கொடுக்கலையா என்று சொல்லி பழனிவேலுவின் கேரக்டரை டேமேஜ் பண்ணி விடுகிறார்.
இந்த பாண்டியனும் சுகன்யா சொல்வதை நம்பி பழனிவேலுமிடம் உனக்கு அறிவே இல்லையா என்று திட்டிக் அவமானப்படுத்துகிறார். இந்த சுகன்யா வக்கிர புத்தியுடன் சிரித்துக் கொண்டே தூங்க ஆரம்பித்து விடுகிறார். பாவம் பழனி எல்லாரும் முன்னாடி அவமானப்பட்டு தலை குனிந்து நிற்கிறார். ஆனால் சுகன்யா ஏதோ சதி செய்து பழனியை டேமேஜ் பண்ணி இருக்கிறார் என்ற விஷயம் மீனா மற்றும் செந்திலுக்கும் மட்டுமே தெரியும். எப்படியாவது மீனா, சுகன்யாவிடமிருந்து பாண்டியன் குடும்பத்தையும் பழனியையும் காப்பாற்ற வேண்டும்.
கதை ஆசிரியருக்கோ அல்லது இயக்குநருக்கோ கதையை வேறு விதமாக நகர்த்த தெரியவில்லை அல்லது புதியதாக சேர்த்த நடிகை யாருக்கோ வேண்டியவராக இருக்கலாம், அதற்காக கதையை மாற்ற தீர்மானித்து விட்டார்கள். பெண்கள் வேறு சீரியலை பார்க்க துவங்கி விட்டார்கள்