ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஓவர் ஆட்டம் ஆடும் சில்வண்டு.. எல்லாம் நடிகர் கொடுக்கும் இடம் தான்

Gossip: பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் அந்த ரியாலிட்டி ஷோ கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் வேர்ல்ட் ஹீரோ அதை நடத்தியதற்கும் இப்போது வி நடிகர் நடத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

புது மாற்றம் வந்த சூழலில் மக்களும் தங்கள் ஆதரவை அமோகமாக கொடுத்தார்கள். முதல் இரண்டு வாரம் நடிகரை அப்படி இப்படி என புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் இப்போது அவருக்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அழுது சீன் போடும் ரீல் மகள்

குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் நடிகர் கேள்வி கேட்கிறார். சில போட்டியாளர்களை கண்டு கொள்ளவில்லை என்ற பேச்சு வெளிப்படையாக கிளம்பியுள்ளது. அதிலும் ரீல் மகளுக்கு அவர் ரொம்ப தான் இடம் கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே சிறு பெண் என வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு கொஞ்சம் சலுகை கொடுத்தனர். அதை பயன்படுத்திக் கொண்டவரின் ஆட்டம் இப்போது அதிகமாகிவிட்டது.

சொந்த வீட்டில் இருப்பது போல் சில சமயங்களில் இவர் நடந்து கொள்வதும் எரிச்சலை கிளப்புகிறது. அதே போல் எதற்கெடுத்தாலும் அழுது சீன் போட்டு நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும் கடுப்பேற்றி வருகிறார்.

நடிகரும் இதை கண்டும் காணாமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால் அவருடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். அதனால் இந்த வாரம் ரீல் மகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Trending News