திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அஜித்தின் உதவி, வெளிய தெரியாமல் போக காரணம்.. இவர கிண்டல் பண்ண எப்படியா மனசு வருது!

Ajithkumar: நடிகர் அஜித்குமாரை பிடிக்காதவர்கள் பெரும்பாலானோ அவர் மீது வைக்கும் குற்றச்சாற்று சமூக அவலங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பதில்லை என்பதாகத்தான் இருக்கும். உண்மையில் மீடியா முன் நின்று இஷ்டத்திற்கு பன்ச் டயலாக் பேசிவிட்டு, தன்னுடைய படங்களை ஓட வைப்பவர்களுக்கு மத்தியில் அஜித் ரொம்பவே வித்தியாசமானவர்.

தன்னை நேசிக்கும் ரசிகர்களை கொம்பு சீவி விட்டு அதன் மூலம் தன்னுடைய சக்தியை பிறருக்கு காட்ட வேண்டும் என அஜித் ஒரு போதும் விரும்பியது இல்லை. தன்னுடைய ரசிகர்கள் குடும்பத்தை பார்த்து, ஒழுங்காக இருந்தாலே போதும் என்று நினைக்கக் கூடியவர். இதைக் கூட அஜித்துக்கு ரசிகர்கள் மேல் கூட அக்கறை இல்லை என்று திரித்து சொல்கிறார்கள்.

Also Read:புருஷன் மாதிரியே ஷாலினிக்கு இருக்கும் தங்கமான மனசு.. உண்மையை மனம் திறந்து பேசிய நடிகர்

இயற்கை பேரழிவுகள் வரும் பொழுது கூட அஜித் பெரிய அளவில் எந்த உதவியும் செய்வதில்லை என்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது ஆனால் அவர் சினிமாவிலும் சரி, பொது மக்களுக்கும் சரி எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார். அவருடைய அப்பா மற்றும் அம்மா பெயரில் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து முதியவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

உதவும் உள்ளம் கொண்ட அஜித்

சினிமா கலைஞர்களுக்கு, நலிவுற்ற கலைஞர்களுக்கு அஜித் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். நிறைய நடிகர்களுக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவர்களை சினிமாவில் வாழ வைத்திருக்கிறார். பெரும்பாலும் அஜித்தை பற்றி யாரும் பொதுவெளியில் அவ்வளவாக பேசாமல் இருப்பதும் அவர் கேட்டுக் கொண்டதற்காகத்தான்.

அஜித் குமார் பொதுவாக தன்னுடைய பெயரில் எந்த உதவியும் வெளியில் போகக்கூடாது என்று நினைப்பவர். இதனால் தான் தன்னுடைய நண்பர்களிடம் பணம் கொடுத்து அவர்களை சுற்றி இருக்கும் ஏழை எளியவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது அதை செய்ய வைக்கிறாராம். இதனால் தான் அஜித்தான் இந்த உதவியை செய்தார் என்று வெளியில் தெரியாமல் இருக்கிறது.

தன்னால் ரசிகர்கள் எந்த விதத்திலும் கஷ்டப்படக் கூடாது என்று அஜித் நினைக்கிறார். அதே போன்று செய்யும் உதவி வெளியில் பிரபலமாக கூடாது என நினைக்கிறார். இது தெரியாமல் அஜித்தை எப்படியாவது அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையில்லாமல் கிண்டல் அடிப்பவர்கள் அவரைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

Also Read:அமீர்கானுக்கு மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா.? அஜித்தை அவமானப்படுத்தி வசமாக சிக்கிய நடிகர்

- Advertisement -

Trending News