திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நண்பனின் இறப்பிற்கு வராத அஜித்.. கல்நெஞ்சம் படைத்தவரா? ஏகே தரப்பில் கொடுத்த பதிலடி

அஜித் பொதுவாக எந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். காரணம் என்னவென்றால் அஜித் வந்தால் அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள அங்கு ஒரு கலவரமே நடந்து விடும். இதை தவிர்ப்பதற்காக தான் அஜித் பொதுவாக பல நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் பிரபலங்களின் இறப்பில் தவறாமல் அஜித் கலந்து கொள்வார். சமீபத்தில் அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் மற்றும் நண்பருமான நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். இவர் அஜித்தின் முகவரி, சிட்டிசன், ஆஞ்சநேயா, வரலாறு, வில்லன் போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

Also Read : நெகட்டிவ் கேரக்டரிலும் முத்திரை பதித்த அஜித்தின் 5 படங்கள்.. கேரியரையே மாற்றிய மோசமான வில்லத்தனம்

ஆனால் சக்கரவர்த்தியின் இறுதிச்சடங்கில் அஜித் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய நண்பனின் இறப்பிற்கு கூட அஜித் வரவில்லையே கல் நெஞ்சம் படைத்தவரா என பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். இதற்கு ஏகே தரப்பில் இருந்து தரமான பதிலடி ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது முக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்து பேசி உள்ளார். எஸ் எஸ் சக்கரவர்த்திக்கு கொரோனா காலத்தில் கேன்சர் வந்தது. ஆகையால் முக்கியமான நபர்கள் யாரும் அவரை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அஜித்தும் அப்போது ஃபோனில் விசாரித்து விட்டுள்ளார்.’

Also Read : அஜித் காசு விஷயத்தில் ரொம்பவும் கரெக்ட்டாக இருப்பார்.. ஹெச். வினோத்துக்கு அஜித் சொன்ன தரமான அட்வைஸ்

இந்நிலையில் சக்கரவர்த்தி இறப்புக்கு அஜித் வராததற்கு காரணம் அவரின் தந்தை இறந்து ஒரு மாத காலம் தான் ஆகிறது. அதனால் வேறு ஒரு துக்க நிகழ்வில் அஜித் கலந்து கொள்ள கூடாது என அவரது வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறியுள்ளனர். இதை அஜித்தும் கடைப்பிடித்து உள்ளார்.

அதுமட்டும்இன்றி எஸ் எஸ் சக்கரவர்த்தி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் அஜித்திடம் தொலைபேசியிலும் பேசி இருந்தாராம். மேலும் சக்கரவர்த்தியை வேறு ஆளாக நினைக்காமல் தன் வீட்டின் ஒரு ஆளாக நினைக்க கூடியவர் அஜித். திரை துறையைப் போல சக்கரவர்த்தியின் இழப்பு அஜித்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.

Also Read : ஹீரோவை மிஞ்சிய 6 வில்லன் கதாபாத்திரம்..அஜித்திற்கு பயத்தை காட்டிய விக்டர்

Trending News