Bigg Boss 8: பிக் பாஸ் காய்ச்சல் இன்னும் இணையதளத்தில் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது போல.
நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிறைய விஷயங்களை தோண்டி தோண்டி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அப்படி ஒரு விஷயம் தான் அருண் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வராதது.
95 நாட்களைக் கடந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தார்கள்.
பிக்பாஸ் வீட்டுக்கு அருண் ஏன் திரும்ப வரல?
ஆனால் அதில் அருண் மற்றும் தீபக் தான் உள்ளே வரவில்லை. உண்மையை சொல்லப்போனால் எலிமினேட் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்தது அவர்கள் மீதான கொஞ்சம் பாசிட்டிவ் விமர்சனத்திற்கும் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் திரும்ப ஏன் பிக் பாஸ் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அருணின் பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அருண் மற்றும் தீபக் இருவருமே எலிமினேட் ஆனது இறுதிப் போட்டிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு.
அவர்கள் வீட்டில் இருக்கும்போது எலிமினேட் ஆன போட்டியாளர்கள் எட்டு எட்டு பேராக உள்ளே வர ஆரம்பித்து விட்டார்களாம்.
இவர்கள் வெளியே சென்று எல்லா பிராசஸையும் முடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களை சந்தித்து பொங்கல் கொண்டாட்டத்தில் அவர்களுடன் இருந்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இவர்கள் வீட்டிற்குள் சென்றாலும் இரண்டு நாட்கள் தான் இருந்திருக்க முடியும்.
மேலும் அருணுக்கு உடல்நிலை வேறு சரியில்லாமல் போய்விட்டதாம். இதனால் தான் தீபக் மற்றும் ஆர்வம் பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்ப வரவில்லையாம்.