Balakrishna: தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்திருக்கிறது.
இவருக்கு எதுக்கு இந்த விருது கொடுக்கிறார்கள் என்று பலருக்கும் தோணலாம். இதற்கு காரணம் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் இவர் ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருப்பது தான்.
ட்ரோல் செய்யும் அளவுக்கு இவருடைய செயல்கள் இப்போது இருக்கலாம். ஆனால் பத்மபூஷன் விருதுக்கு தகுதியான இவருடைய கடந்த கால வாழ்க்கையை பற்றி பார்த்து விடலாம்.
பத்மபூஷன் விருது
*.1974 இல் தத்தம்மா கால என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
*. சமூக கருத்து நிறைந்த படங்கள், நாட்டுப்புற படங்கள், புராண படங்கள் என எல்லா விதமான கதைகளிலும் இவர் நடித்திருக்கிறார்.
*. 65 வயதிலும் ஆக்ஷன் ஹீரோவாக அக்கட தேசத்து ரசிகர்களின் மனதில் குடிகொண்டு இருக்கிறார்.
*. மிகப்பெரிய அரசியல் சதுரங்க ஆட்டத்திற்கு நடுவே 2014, 2019, 2024 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.
*. பாலகிருஷ்ணா ஆன்ஸ்டாபிபல் நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்.
*. OTT தளங்களில் அதிகம் இவருடைய படங்கள் தேடி பார்க்கப்படுகின்றன.
*. ஆந்திராவில் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்திற்கு முன்பே நிறைய மருத்துவ வசதிகளை நிறுவினார்.
*. நிறைய வரலாற்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஹீரோ இவர் தான்.
*.தன்னுடைய தாய் பசவதாரகம் புற்றுநோயில் இறந்து விட்டதால் அவருடைய பெயரில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஹைதராபாத்தில் நிறுவி இருக்கிறார்.
இங்கு புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது