புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மார்க் ஆண்டனி பயத்தால் சந்திரமுகி 2 ரிலீஸ் தள்ளிப் போச்சா?. பெரிய உருட்டாக உருட்டிய பி வாசு

Chandramukhi 2: கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் அடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கி இருக்கிறார். முதல் பாகத்தின் மீதான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வந்து ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக, பெயர் மட்டுமே சந்திரமுகி 2 மற்றபடி இது அந்த படத்தின் தொடர்ச்சி அல்ல இது புது கதை என்று முன்னறிவிப்பு செய்து விட்டார்கள்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பேய் படங்களுக்கு எப்போதுமே குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் தான் இந்த சந்திரமுகி 2 படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டது. ரிலீஸ் தேதியுடன் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகு, ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென தேதி மாற்றப்பட்டது. இது எல்லோருக்குமே சற்று குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.

Also Read:நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது மார்க் ஆண்டனி படம் தான். அந்த படமும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக போவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், சந்திரமுகி 2 வை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள் பட குழு என்று கூட சொல்லப்பட்டது. படத்தில் டிரைலரை பார்த்து பயந்து தான் சந்திரமுகி 2 பட குழு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக இயக்குனர் பி வாசு ஐதராபாத் சென்றிருந்தார். அவரிடம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணத்தை பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு பதில் சொல்லிய வாசு, படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு ஐந்து நாட்கள் இருக்கும் பொழுது படத்தின் 450 ஷார்ட்ஸ் காணாமல் போய்விட்டதாக டெக்னீசியன்கள் தன்னிடம் அறிவித்திருந்தார்கள்.

Also Read:மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

எல்லா இடத்திலும் தேடியும் கிடைக்காத காரணத்தினால் தான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார். இருந்தாலும் நெட்டிசன்கள் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலரை பார்த்து தான் பயந்து ரிலீஸ் தேதியை பட குழு ஒத்தி வைத்து விட்டதாகவும், அதை சமாளிக்கவே இப்போது இயக்குனர் வாசு உருட்டுகிறார் என்றும் அவர் செய்து வருகிறார்கள்.

உண்மையிலேயே மார்க் ஆண்டனி படத்துடன் சந்திரமுகி 2 ரிலீஸ் ஆகி இருந்தால் வெற்றி பெற்று இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். மார்க் ஆண்டனி படம் அந்த அளவுக்கு வெற்றி பெற்றிருப்பது, வசூலிலும் சாதனை செய்திருக்கிறது. உண்மை காரணம் எதுவாக இருந்தாலும், சந்திரமுகி 2 படத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யாமல் இருந்தது அந்த படக்குழுவின் நல்லதுக்காக தான் இருக்கும்.

Also Read:மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

Trending News