வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாண்டடாக வந்த அழைப்பு, கரெக்ட்டாக யூஸ் பண்ணிய ஜிவி.. சூப்பர் ஸ்டாருக்கு கூட இந்த தைரியம் இல்ல

பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் விதமாக அந்த கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதில் தமிழ்நாட்டிற்கும் வருகை தந்திருந்தார். அப்போது அவர் பேசிய விஷயங்கள் இன்று வரை டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவரை நேரில் சந்தித்ததும் பயங்கரமாக வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

அமித்ஷாவின் தமிழக வருகையை வரவேற்கும் விதமாக பல துறைகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பாஜக கட்சி என்றாலே தமிழகத்தில் ஒரு பீதி இருப்பதால் என்னவோ பல பிரபலங்களும் அழைப்பை புறக்கணித்து விட்டனர். இதில் நடிகர் விஷாலும் ஒருவர். ஆனால் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீவி பிரகாஷ் இந்த அழைப்பை ஏற்று அமித்ஷாவை நேரில் சந்தித்து இருக்கிறார்.

Also Read:பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

அமித்ஷா மற்றும் ஜிவி பிரகாஷின் இந்த சந்திப்பு தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இது பற்றி பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு போன் செய்து, பாஜக கட்சியில் இணையும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜிவி கொடுத்த நெத்தியடி பதில் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

அமித்ஷாவை நேரில் சந்தித்த ஜீவி இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் நிறை மற்றும் குறைகளை எடுத்து சொல்லி இருக்கிறார். மேலும் தமிழகம் மற்றும் தமிழ் மொழி மீது எந்த ஒரு அடக்கு முறையும் எடுக்க வேண்டாம் எனவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். சில விமானங்களில் செல்லும் பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு கொடுக்கப்படுவதே இல்லை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:மாணவிக்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல்.. குவிந்து வரும் பாராட்டுகள்.

மேலும் பள்ளி மாணவர்களிடையே புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர முயற்சி செய்யும் நீங்கள், முதலில் இங்கிருக்கும் பள்ளிகளின் கட்டமைப்பை பார்க்க வேண்டும் எனவும், இங்குள்ள பள்ளிகளில் முதலில் கட்டமைப்பு சரி இல்லை எனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக ஜிவி பிரகாஷ் சொல்லி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல சினிமா பிரபலங்கள் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் தமிழர்களின் கோரிக்கையை பற்றி என்றுமே அந்த கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசியது கிடையாது. ஆனால் ஜிவி பிரகாஷ் தானாக முன்வந்து இது பற்றி பேசியிருப்பது பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. சினிமா பிரபலங்கள் இது போன்ற முன்வந்து சமூகப் பிரச்சனைகளை பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம் தான்.

Also Read:நாரப்பாவால் அப்செட்டில் இருக்கும் ஜிவி.பிரகாஷ்.. ஆட்டைய போட்ட தெலுங்கு படக்குழு!

Trending News